முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூடியது

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.20 - அ.தி.மு.க. செயற்குழு_ பொதுக்குழு கூட்ட த்திற்கு வந்த  முதல்_ அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலில் தமிழகம் _ புதுச்சேரியில் உள்ள 40 எம்.பி. தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர்முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நேற்று 

 அ.தி.மு.க. பொதுக்குழு _ செயற்குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில் பங்கேற்க வேண்டிய உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்புகள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, செயற்குழு _ பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர். ஏராளமான தொண்டர்களும் வானகரத்தில் குவிந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்_அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. செயற்குழு _ பொதுக்குழு நேற்று  பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகியது. முதலில் செயற்குழுவும் அடுத்து பொதுக்குழுவும் கூடியது. 

அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் இரங்கல் தீர்மானத்தை வாசித்தனர். அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்துக்கு மதியம் வந்த முதல்_ அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல் _ அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று போயஸ் கார்டனில் இருந்து வானகரம் மண்டபம் வரை கொடி, தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 

வாழை மரத்தோரணங் கள், வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. முதல்_அமைச்சர் ஜெயலலிதாவை வழிநெடுக தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பேசினர். அப்போது 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம் என்று அவர்கள் சபதம் ஏற்றனர். நிர்வாகிகள் கருத்தை அறிந்த பிறகு முதல்_ அமைச்சர் ஜெயலலிதா சிறப்புரை ஆற்றினார். அப்போது தொண்டர்கள் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக எப்படி பாடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கனார். 

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிரமாக பாடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்_அமைச்சர் ஜெயலலிதா செய்துள்ள சாதனைகளுக்கும், மக்கள் நலனுக்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பபட்டன. 

 வரவேற்பு ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, துணை மேயர் பெஞ்சமின், அம்பத்தூர் நகரச் செயலாளர் அலெக்சாண்டர், மாவட்ட துணை செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், மத்திய சென்னை மாவட்ட மாணவர் அணி முன்னாள் துணைச் செயலாளர் வி.விவேக்குமார் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்