முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முள்ளி வாய்க்கால் முற்றத்தை ஆய்வு செய்ய உத்தரவு

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 20_ முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம்  என்று  ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்  அளித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான  தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளார் பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி முள்ளிவாய்க்கால் முற்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீசின் அடிப்படையில் இடிப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அந்த நினைவு கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை விளார் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்ஆய்வு செய்ய வேண்டும்  செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்