முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி குறித்து முடிவு எடுக்க முதல்வருக்கு அதிகாரம்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.20 - சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்_அமைச்சருமான ஜெயலலிதா தலைமையில்  நேற்று   நடந்தது. 

இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. 

சென்னை வானகரத்தில்  தனியார் திருமண மண்டபத்தில்  அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்  நேற்று   மதியம் 3மணிக்கு நடைபெற்றது. அதில்  தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளதாகவும், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிமுக பாடுபடும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் வகுக்க, முடிவு எடுக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கப்பட்டதற்கு அதிமுக செயற்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது பற்றிய விபரம் வருமாறு:_

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து !

தலைமைப் பண்புகளின் உறைவிடமாகவும், தன்னலமற்ற தொண்டுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்பவர், நம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதல்வர்.

இதன் காரணமாகவே பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  தான் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, முதல்வரின் திருக்கரங்களில் ஒப்படைத்தார்.  

தமிழ் இனமும், தமிழ் மொழியும் காக்க தன்னையே அர்ப்பணிக்கும் தியாக தீபமாகவும், தன்னை நம்பி வந்தவர்கள் யாரென்ற போதிலும் அவர்களை தன் அன்பினால் வாழ வைக்கும் தாயாகவும் திகழ்பவர் முதல்வர் ஜெயலலிதா.  இத்தகைய தலைமையின் கீழ் பணியாற்றுவது நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திட்ட மிகப் பெரிய பாக்கியம்.  

கோடான கோடி கழக உடன்பிறப்புகளின் நம்பிக்கையாகவும், அடைக்கலமாகவும், படைக் கலனாகவும் வாழும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர்,முதல்வர் ஜெயலலிதாவின் உழைப்பாலும், தியாகத்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மென்மேலும் வெற்றிப் பாதையில் வீருநடை போடுகிறது.  

`இந்த நாடும், இந்த இயக்கமும் இன்னும் மேன்மையுற வேண்டும்' என்ற சிந்தனையை தன் அன்றாடப் பிரார்த்தனையாகக் கொண்டு நாட்டு மக்களின் நலன்களுக்காக தன்னையே அர்ப்பணித்து அரும்பணியாற்றி வரும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 24_ஆம் தேதியன்று பிறந்த நாள்.  

நம் அம்மா அவர்களுக்கு இறைவன் முழு உடல் நலனையும், 

மன அமைதியையும் நிறைவாக வழங்கி, தன் கரங்களில் முதல்வர் ஜெயலலிதாவை பாதுகாத்து வழி நடத்த எல்லாம் வல்ல இறைவனை இந்தப் பொதுக்குழு பிரார்த்திக்கிறது.

66_வது பிறந்த நாள் காண இருக்கும், கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா  பல்லாண்டு வாழ்க! அம்மா அவர்களின் திருப்பணிகளால் பாரதமும் வாழ்க! என்று எல்லையில்லா மகிழ்ச்சியோடு நன்றியுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறி மகிழ்கிறது இந்தப் பொதுக்குழு.    

முன்மொழிபவர்: ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கழகப் பொருளாளர் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்

வழிமொழிபவர்கள்:அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 2

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், 

கழக வேட்பாளரின் அமோக வெற்றிக்குக் காரணமான, 

நம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், 

மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குப் பாராட்டு!

4.12.2013 அன்று நடைபெற்ற ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், தீய சக்தியாம் கருணாநிதியின் கட்சி பல பிற்போக்கு சக்திகளின் துணையோடும், மக்களை பிளவுபடுத்தும் நச்சுச் சிந்தனை உடையோரின் மறைமுக உதவியோடும், அரசியலை பிழைப்பாய்க் கருதுவோரின் ஆதரவோடும் தேர்தல் களத்தில் நின்றது.  

தேர்தல் களத்தில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதோடு, பொய்ப் பிரச்சாரங்களின் மூலம் மக்களைப் பிளவு படுத்தி வாக்கு சேகரிக்கும் கீழ்மைச் செயல்களில் கருணாநிதியின் கட்சியும், அதற்கு துணை போனவர்களும் <டுபட்டனர்.  இத்தனைக்கும் நடுவில், `இரட்டை இலை' சின்னம் வெற்றியின் சிகரத்தை அடைந்ததற்கு நம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மக்கள் செல்வாக்கும், நிர்வாகத் திறமையும், மதிநுட்பமும், அயரா உழைப்பும், எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுமே முழு முதற் காரணம்  என்றால் அது மிகையாகாது.  

முதல்வர் ஜெயலலிதா  இடையறாத அரசுப் பணிகளுக்கு நடுவே, ஏற்காடு தொகுதிக்கு பயணம் செய்து பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தீவிர 

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.  

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவின் உரையைக் கேட்ட மக்கள் பெருவாரியாக ஆர்வத்துடன் வாக்களித்தார்கள்.  எனவே தான், திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத் தேர்தல்கள் வரிசையில், பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் ஏற்காடு தொகுதி கழக வேட்பாளர் மாபெரும் வெற்றி பெற்றார். 

இத்தகைய மகத்தான வெற்றியை கழகத்திற்கு ஈட்டித் தந்த, நம் 

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது நன்றியினை மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துக் கொள்கிறது. 

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கழக வேட்பாளரை மகத்தான வெற்றி பெறச் செய்த, ஏற்காடு தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு இந்தப் பொதுக்குழு 

தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 

முன்மொழிபவர் : எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் நெடுஞ்சாலைகள் மற்றும்   சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 3

2014_ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் 

பொதுத் தேர்தலில், கழகத்தின் தேர்தல் கூட்டணி விக்ஷ்கங்களை வகுக்க 

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், 

மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்குதல்!

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் இந்திய நாட்டு வரலாற்றில் மிக இன்றியமையாத தேர்தலாக அமையும்.  ஊழல், பணவீக்கம், விலைவாசி உயர்வு, கருப்புப் பண பதுக்கல் போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து பொயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.  

இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை சீர்படுத்தி, மக்களை இன்னல்களில் இருந்து காக்க வேண்டிய பெரும் பொறுப்பு அடுத்து அமைய இருக்கும் 

மத்திய அரசுக்கே இருக்கிறது.  

குடும்ப அரசியல்; கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் பிடியில் ஆட்சி; வழிநடத்த ஆளின்றி திணறும் நிர்வாகம்; அனைத்து முனைகளில் இருந்தும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்; அண்டை நாடுகளின் மிரட்டல் ஆகியவை மத்திய அரசை சழ்ந்திருக்கும் அபாயங்கள் ஆகும்.  

இந்தச் சழ்நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் முழுமையான 

வெற்றி பெற்றால் மட்டுமே தேசத்தின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் 

உறுதி செய்திட இயலும்.  

எனவே, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்கு.  இருப்பினும், கூட்டணி விக்ஷ்கங்களை அமைக்கவும், தேர்தல் குறித்த அனைத்து முடிவுகளை எடுக்கவும், கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு 

தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு முழு அதிகாரத்தை வழங்குகிறது.   

முன்மொழிபவர் : முனுசாமி கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் கிருழணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள்  மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 4

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புகளின் தேர்தல்களை நடத்துவதற்கான கால அளவு நீட்டிப்பு!

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பு அடுத்து வரும் மாதங்களில் வெளியாகக் கூடிய வாய்ப்பு உள்ளதால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிகளின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கழக அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உள்ள விதியை தளர்த்தி, நாடாளுமன்ற மக்களவைப் 

பொதுத்  தேர்தல் முடிந்த பிறகு கழக அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு இந்தப் பொதுக்குழு தனது முழு ஒப்புதலை வழங்குகிறது.

முன்மொழிபவர் : டாக்டர் பாண்டியன் கழக அமைப்புச் செயலாளர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 5

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு 

விற்கப்படுவதை, தனது மதிநுட்பத்தால் தடுத்து நிறுத்திய 

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், 

மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குப் பாராட்டு!

மத்திய அரசின் நைவரத்னா$ நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவதும், தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவதும், பல்லாண்டு காலமாக எரிசக்தித் துறையில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதுமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி செய்த போது, சடுஊ நிறுவனத் தொழிலாளர்களின் உணர்வுகளுக்கும், ஒட்டு மொத்தத் தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து, தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் கருத்தில் கொள்ளாமல், சடுஊ பங்குகளை வாங்கத் தகுதி பெற்ற தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அவற்றை விற்பனை செய்யுமாறு மத்திய அரசை வற்புறுத்தி, தனது மதிநுட்பத்தால் அந்த முயற்சியில் வெற்றி கண்ட கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது மனமார்ந்த பாராட்டுதலை தெரிவித்து மகிழ்கிறது.  

முன்மொழிபவர் : ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., அவர்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்

வழிமொழிபவர்கள் :அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 6

மத்திய ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து பல ஆண்டுகள் பங்கேற்ற போதும், எந்த ஒரு நற்செயலையும் செய்யாமல் உலகத் தமிழர்களின் உள்ளமெல்லாம் வேதனை கொள்ளும் வகையில் துரோகம் இழைத்த தீய சக்தி கருணாநிதியை, வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்க 

தமிழக வாக்காளர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

தீய சக்தியான திமுக_வின் தலைவர் கருணாநிதியால் தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட துயரங்களும், வேதனைகளும் ஏராளம், ஏராளம்.

காவேரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தமிழக விவசாயிகள் பெற முடியாமல் போனதற்கு அடிப்படைக் காரணம் தனது ஊழல் சாம்ராஞுஜியத்தை காப்பாற்றிக் கொள்ள கருணாநிதி செய்த மாபெரும் துரோகமே.

தமிழர்களுக்குச் சொந்தமானதும், தமிழ் நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடிக்கத் துணைபுரிவதுமான 

கச்சத் தீவு இலங்கைக்கு இந்திய அரசால் தாரை வாக்கப்பட்ட போது 

வாய் மூடி மவுனியாக, தமிழ் மண் அபகரிக்கப்பட காரணமாய் இருந்த இனத் துரோகி கருணாநிதி.   

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மாபாதகச் செயலைச் செய்தவர் கருணாநிதியே.  

தமிழ் நாட்டில் லஞ்ச, ஊழல், அராஜக ஆட்சியை கட்டவிழ்த்து விட்டு, 

தமிழ் நாடு முழுவதும் தனது கட்சிக்காரர்கள் செய்த நில அபகரிப்புகளுக்கு துணை போன கருணாநிதியால், தமிழ் நாட்டு மக்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாயினர். 

தமிழ் நாடு மின்சார வாரியத்தை சீர்குலைத்து 40 ஆயிரம் கோடி பொய் கடனில் அதனை மூழ்கடித்து பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதோடு, மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின் குறை மாநிலமாக ஆக்கியவர் கருணாநிதி.  முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்தது.  மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் இடையேயான இடைவெளி 4,000 மெகாவாட் அளவுக்கு இருந்தது.  இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் எடுக்கப்பட்டன.  

முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர தொடர் நடவடிக்கை காரணமாக மின்வெட்டு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் முதல் மின் வெட்டே இல்லை என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாதனையை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்டோபர் மாதம் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின், குளிர்கால கூட்டத் தொடரின் போது பெருமையோடு அறிவித்தார்கள். 

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இவ்வாறு அறிவித்த ஒருசில நாட்களிலேயே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் கோளாறுகள் ஏற்பட்டு 2,500 மெகாவாட் அளவுக்கு 

மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.  அதே சமயத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் நிலையங்கள் எல்லாம் எப்பொழுதும் போல தொடர்ந்து நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  இதனால் மீண்டும் மின் வெட்டினை அறிவிக்க வேண்டிய கட்டாயம் 

தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டது. தமிழ் நாட்டில் மின்வெட்டே இல்லை என்ற நிலையை உருவாக்கி சாதனைப் படைத்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் புகழுக்கும், பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல்களையும், மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதையும் எதிர்த்து மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்பதன் காரணமாக, மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை மனதில் இருத்தியும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும் _ திமுக_வும் சேர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 

மின் உற்பத்தி நிலையங்களில் கோளாறுகள் ஏற்பட சதித் திட்டத்தைத் தீட்டி இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்தது. இப்படி 

தமிழ் நாட்டில் செயற்கையான மின்வெட்டு ஏற்படுவதற்குக் காரணமாக விளங்கியவை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள்.

தமிழக அரசு நிர்வாகத்தில் ஒழுங்கின்மையை உருவாக்கி தமிழ் நாட்டை கடனில் தத்தளிக்க வைத்தவர் தீய சக்தி கருணாநிதி.

பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிக்காத கருணாநிதி, அந்தச் சழ்நிலையிலும் தனது மகளை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கிட காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நாடிச் சென்ற சுயநல வாதி.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், இந்தியாவில் உள்ள எதிரும், புதிருமான பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் போன்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் கேட்டு அவர்களுக்கு கடிதம் எழுதிய கொள்கையற்ற, சுயநல, பிழைப்புவாத அரசியலுக்கு சொந்தக்காரர் கருணாநிதி.  

தேவே கவுடா, ஐ.கே. குஜரால் ஆகிய பிரதமர்களின் கூட்டணி ஆட்சியிலும், பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும், அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியிலும், இடைவிடாது பல ஆண்டுகளாக மத்திய அரசில் பங்கு கொண்ட கருணாநிதி, தமிழர்களுக்கு பெருமையும், நன்மையும் தருகின்ற எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தியதே இல்லை.  மாறாக, மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் வாய்ப்பின் மூலம் தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பல லட்சம் கோடி பொய்களை சம்பாதிக்க வழிவகை செய்து கொண்டவர் கருணாநிதி.  

2ஜி அலைக்கற்றை விற்பனை முறைகேட்டின் மூலம் பல லட்சம் கோடி பொய்களை சுருட்டியது கருணாநிதியும், அவரது குடும்பமும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களும் என்று நாடே பேசுகிறது.

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகக் கொண்டு வரும் திட்டங்களுக்கான மத்திய அரசின் அனுமதியையும், மத்திய அரசிடம் வைக்கும் கோரிக்கைகளையும் முறியடிக்கும் தீய நோக்கத்தோடு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி முட்டுக் கட்டை போட்டு வந்தவர் தமிழ் இனத் துரோகி கருணாநிதி.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் சிங்கள அரசின் ராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்ட போது, தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும், மத்திய கூட்டணி அரசின் இரண்டாவது பெரிய பங்குதாரராகவும் இருந்தவர் கருணாநிதி.  அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் அநியாயப் போரை நிறுத்துங்கள் என்று உலகத் தமிழர்கள் எல்லாம் அழுது குரல் எழுப்பிய போது, உண்ணாவிரதக் கபட நாடகம் நடத்தியவர் கருணாநிதி.  

உள்நாட்டுத் தமிழகர்கள் என்றாலும், உலகத் தமிழர்கள் என்றாலும் அவர்களை பதவிக்காகவும், தன் குடும்பத்தின் சுயநலத்திற்காகவும் பலிகடா ஆக்குபவர் கருணாநிதி.      

இத்தகைய கொடூர சிந்தனை கொண்ட சுயநலவாதி, தீய சக்தி, 

இனப் படுகொலைக்குத் துணை போன தமிழினத் துரோகி கருணாநிதி, 

2014_ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் வாக்கு கேட்டு வந்தால், கருணாநிதியையும், அவரைச் சேர்ந்தவர்களையும் தமிழ் நாட்டு வாக்காளர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு தமிழக மக்களை வேண்டி கேட்டுக் கொள்கிறது.  

முன்மொழிபவர் : நத்தம் இரா. விசுவநாதன் அவர்கள் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும்   ஆயத் தீர்வை துறை அமைச்சர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 7

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்திய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்குக் கண்டனம்!

இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும், தமிழ்ப் பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க் குற்றங்கள் குறித்தும், இனப் படுகொலை குறித்தும் நேர்மையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்; அந்தக் குற்றங்களைப் புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும்; பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணமும், தகுந்த பாதுகாப்பும் தரப்பட வேண்டும் என்றும்; ஏனைய பெரும்பான்மை மக்களுக்கு இணையான உரிமையும், பாதுகாப்பும் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும்; இவையெல்லாம் நடந்து முடியும் வரை இலங்கை அரசுடன் இந்திய அரசு நட்பு நாடு என்ற அளவில் ராஞுஜிய உறவு கொள்ளக் கூடாது என்றும்; இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாட்டில் பெயரளவிற்குக் கூட இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும்; இந்த காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், மத்திய அரசைக் கேட்டுக் கொண்டு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  உலகிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றிய ஒரே ஆட்சி, நம் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் நடைபெறும் ஆட்சி மட்டுமே என்ற உண்மை வரலாற்றில் என்றும் நிலைத்து இருக்கும்.   

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பிரிட்டன், அமெரிக்கா போன்ற வலிமை வாய்ந்த நாடுகளும், இன்ன பிற அமைப்புகளும் இன்று குரல் கொடுத்து வருவதற்கு, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன.  

தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் தீர்மானங்களை அலட்சியப்படுத்தி, கொழும்புவில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டில் இந்திய அரசு சார்பில் வெளி விவகாரத் துறை அமைச்சரை பங்கேற்கச் செய்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.  

  முன்மொழிபவர் : அ. தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு வக்பு வாரியம்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 8

இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு 

இந்தியாவில் பயிற்சி கொடுக்க அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ள 

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்குக் கண்டனம்!

இலங்கையில் இனப் படுகொலை நடத்தியதோடு, தமிழக மீனவர்களை அன்றாடம் துன்புறுத்திக் கொண்டிருக்கின்ற இலங்கை நாட்டின் ராணுவத்தினருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் எவ்வித பயிற்சியும் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி, 

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர், 

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பாரதப் பிரதமருக்கு பல்வேறு கடிதங்களை எழுதி உள்ளார்கள். இதே போன்று, இலங்கை நாட்டிற்கு போர்க் கப்பல்களை வழங்க வகை செய்யும் ஒப்பந்தத்தினை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்கள். 

மத்திய அரசு, தற்போது `வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வண்ணம்' இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நான்கு ஆண்டு தொழில்நுட்பப் பட்டம் போன்று இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கும் வழங்க முடிவு செய்திருக்கிறது.  இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் மத்திய அரசின் இந்தச் செயல்கள் அமைந்துள்ளன.

தமிழ் மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் மாபாதகச் செயலுக்கு இந்தப் பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிபவர் : டாக்டர் வேணுகோபால், எம்.பி., கழக மருத்துவ அணிச் செயலாளர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 9

அப்பாவித் தமிழக மீனவர்களை கடத்திச் சென்று சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதையும், அவர்களுடைய படகுகளைக் கைப்பற்றுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் 

இலங்கை அரசை தட்டிக் கேட்காத 

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்குக் கடும் கண்டனம்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கடத்திச் செல்லப்படுவதும், சிறையில் அடைத்து சித்ரவதை செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.  தமிழக மீனவர்களுக்கு சொந்தமான பல மீன்பிடிப் படகுகள் இன்னமும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.  இதன் விளைவாக, பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்கும் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கின்றனர்.  உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சனையில் தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பல முறை பாரதப் பிரதமரை கடிதங்கள் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இருப்பினும், 

மத்திய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பல தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடிப் படகுகளை திரும்பப் பெற்றுத் தரவும் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்துக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்கு இந்தப் பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முன்மொழிபவர் : ஜெயபால் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் மீனளத் துறை அமைச்சர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 10

டிபிடே உலக சதுரங்க வாகையர் போட்டியை இந்தியாவிலேயே 

முதன் முறையாக சென்னையில் சிறப்புற நடத்திக் காட்டியதோடு, சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கு 2 கோடி பொய் 

நிதியுதவி வழங்கிய கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், 

மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பாராட்டும், நன்றியும்!

நாடுகளிடையே நல்லுறவையும், அனைத்து மக்களிடையே நல்லெண்ணத்தையும், போட்டியாளர்களிடையே ஊக்கத்தையும் வளர்க்கும் வகையில் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.  அந்த வகையில், 2013_ஆம் ஆண்டிற்கான டிபிடே உலக சதுரங்க வாகையர் போட்டியினை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் நடத்திட 

அனுமதி அளித்து, அதற்கென 29 கோடி பொய் நிதியினைத் தந்து, உலக சதுரங்க வாகையர் போட்டியின் புரவலராக பொறுப்பேற்றுக் கொண்டு, அந்தப் போட்டியினை தமிழ் நாடு மாநில சதுரங்கக் கழகத்துடன் இணைந்து வெற்றிகரமாகவும், அனைவரும் பாராட்டும் வண்ணமும் நடத்திக் காட்டி, சர்வதேச அளவில் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.  

மேலும், 30.12.2013 முதல் 5.1.2014 வரை தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கு 2 கோடி பொய் நிதி உதவி வழங்கி ஆணையிட்டிருக்கிறார் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு 

தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.  

விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்காகவும், தமிழகத்தை உலக விளையாட்டு வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்காகவும் இத்தகைய சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

முன்மொழிபவர் : ஏ. செந்தில்பாலாஜி அவர்கள் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் போக்குவரத்துத் துறை அமைச்சர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 11

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கின்ற 

வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தினைக் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்குக் கண்டனமும், தமிழகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் வெற்றி கண்ட 

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்குப் பாராட்டும்!

சட்டம்_ஒழுங்கு பாதுகாப்பு மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை முற்றிலுமாகப் புறந் தள்ளிவிட்டு, அரசால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களுக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்குகின்ற வகுப்புவாத வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் அவசர கதியில் அறிமுகப்படுத்தி அதை சட்டமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 

மாநில அரசுகளுடன் விரிவாக கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் முடிவடைகின்ற தருவாயில், இந்த சட்ட முன்வடிவினை நிறைவேற்ற நினைக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்கு இந்தப் பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 

மேலும், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தின் போது அமளிக்காடாகவும், நில அபகரிப்பின் மையமாகவும் விளங்கிய தமிழகத்தை இப்பொழுது அமைதிப் பூங்காவாக மாற்றி அமைத்ததோடு, பல்வேறு கொலை வழக்குகளிலும், வெடிகுண்டு வைத்த வழக்கிலும் தேடப்பட்டு வந்த பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து அதில் வெற்றி கண்டு, இந்த வெற்றிக்கு பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டினையும், பரிசினையும், 

பதவி உயர்வினையும் வழங்கிய கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு 

தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை 

இந்தப் பொதுக்குழு மனதாரப் பாராட்டி மகிழ்கிறது.

முன்மொழிபவர் : பழனியப்பன் கழக தலைமை நிலையச் செயலாளர் உயர் கல்வித் துறை அமைச்சர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 12

பல்லாண்டு சரித்திரம் பேசும் சாதனைகளை இரண்டரை ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டிய, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், 

மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குப் பாராட்டும், நன்றியும்!

தமிழ் நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், மக்கள் நலன் காக்கும் எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  குறிப்பாக,

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத புரட்சித் திட்டமாக, தமிழ் நாட்டில் 

1 கோடியே 85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 

20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், 

ஏழைப் பெண்களுக்கு 25,000 பொய் உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், 

பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு 50,000 பொய் திருமண உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், 

ஏழைத் தாய்மார்களின் நலன் காக்கும் வகையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், 

வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், 

விவசாயிகள் மீது பரிவும், பாசமும் கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வட்டியில்லா பயிர்க் கடன், மானிய விலையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள், விவசாயக் கருவிகள், பாசனக் கருவிகள் முதலானவற்றை வழங்குதல்; 

விவசாயிகளின் மனம் குளிரும் வகையிலான பல்வேறு நலத் திட்டங்கள் அடங்கிய முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்;

குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தமிழ் நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் கல்வி பெற இயலாத நிலை ஏற்படக் கூடாது என்ற உயர்ந்த சிந்தனையில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைப் பள்ளிப் படிப்பு வரை கட்டணமில்லாக் கல்வி; மேல்நிலைப் பள்ளியில் இடைநிற்றலைத் தவிர்க்க ஊக்கத் தொகை; விலையில்லா மடிக் கணினி; சைக்கிள்; பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடப் புத்தகங்கள் எனக் கல்வியில் புரட்சி;

குறைந்த விலையில் சுவை மிகுந்த தரமான உணவு வழங்கும் 

`அம்மா உணவகங்கள்', 

குறைந்த விலையில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கும் `அம்மா குடிநீர்த் திட்டம்', 

வருவாய்த் துறை அலுவலர்கள் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் `அம்மா திட்டம்', 

727 கோடி பொய் செலவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 

தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. மூலம் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேனல்கள் வழங்கும் திட்டம்; 

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது, அங்கு சிக்கித் தவித்த தமிழர்களை அரசு செலவில் பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வந்தது 

என, இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி 

நடைமுறைப்படுத்தி வருவதோடு, நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, கச்சத் தீவு பிரச்சனை போன்ற தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்களை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியும் மகத்தான சாதனைகளைப் படைத்து வரும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு 

தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது. 

முன்மொழிபவர் : பா. வளர்மதி கழக இலக்கிய அணிச் செயலாளர் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 13

தமிழகத்தின் தேவைகளை முன்நிறுத்தும் பல்வேறு கோரிக்கைகளை பலமுறை கேட்டும் அவற்றைத் தர மறுக்கும் 

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்குக் கண்டனம் !  

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், முந்தைய திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பெரும் கடன் சுமையில் தத்தளித்த தமிழகத்திற்கு 

சிறப்பு நிதி ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததோடு, தமிழகத்தின் அத்யாவசியத் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஏதுவாக,  

திமுக நிர்வாகத்தின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக, செயலிழந்து நின்ற தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு சிறப்பு 

நிதித் தொகுப்பினை அளிக்க வேண்டும் என்றும்; 

தமிழகத்திற்கு ஏற்கெனவே மத்திய அரசு வழங்கி வந்த மண்ணெண்ணெயின் அளவை மத்திய அரசு குறைப்பது, ஏழை, எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் தேவையான மண்ணெண்ணெயை முழுவதுமாக வழங்க வேண்டும் என்றும்; 

தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றும்; 

மாணவ, மாணவியருக்கு தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் மடிக் கணினி வழியாக ஏற்பட்டிருக்கும் கல்வி தொழில்நுட்பப் புரட்சியை அங்கீகரித்து சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்றும்; 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் முழு அளவு மின்சாரத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும்; 

தமிழ் நாட்டில் ஏற்பட்ட கடும் வறட்சியை சமாளிக்க கூடுதலாக வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும்; 

திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழக நுகர்வோரைப் பாதுகாத்து, குறைந்த கட்டணத்தில் நிறைவான சேனல்களை அளிக்க தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு 

னுஹளு எனப்படும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்க வேண்டும் என்றும்; 

காவேரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட போராடி வெற்றி கண்டதின் அடிப்படையில், காவேரி நதிநீர் மேலாண்மைக் குழு, காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், 

பாரதப் பிரதமருக்கு கடிதங்கள் எழுதியதோடு, இரண்டு முறை பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அளித்துள்ளார்கள்.  ஆனால், எந்த ஒரு கோரிக்கைக்கும் இதுவரை மத்திய அரசிடமிருந்து சாதகமான நடவடிக்கை இல்லை.  

தமிழக மக்களின் நலனுக்கான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.  

முன்மொழிபவர் :.வெ.கி. சுலோச்சனா சம்பத் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 14

தமிழ் நாட்டில் அரசு நிர்வாகம் மேலும் சிறப்படையவும், 

காவல் துறை மக்களின் நண்பனாக பணியாற்றவும் 

வழிகாட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி இருக்கும் 

மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்குப் பாராட்டு!

`செய்வன திருந்தச் செய்' என்ற தமிழ் மூதுரைக்கு இலக்கணமாகத் திகழ்பவர் நம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் மூன்று நாட்கள் முழுமையாக பங்கு கொண்டு நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் தன் விரல் நுணியில் வைத்து வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறார்கள்.  ஒவ்வொரு நாளும் மக்களை சந்திக்கும் நிலையில் உள்ள மாவட்ட அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து அதன் வழியாக நிர்வாகம் மேலும் செம்மையுற அறிவுரைகளை இந்த மாநாட்டில் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அளித்திருக்கிறார்கள்.  

இந்த மாநாட்டில் மக்கள் நலனுக்கான 312 வளர்ச்சித் திட்டங்களை வழங்கி சாதனை புரிந்திருக்கிறார்கள். 

காவல் துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து மக்களின் நண்பர்களாக பணியாற்ற வேண்டும்; எந்தச் சழ்நிலையிலும் மக்களின் துயரங்களுக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது என்ற மகத்தான அறிவுரையையும் வழங்கி உள்ளார் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இந்த மூன்று நாள் மாநாட்டின் காரணமாக தமிழகத்தின் நிர்வாகமும், காவல் பணிகளும் மென்மேலும் சிறப்புறும் என்று அனைவரும் பாராட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  இத்தகைய சிறப்புக்குரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு 

தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்து மகிழ்கிறது.

முன்மொழிபவர்: டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் கழக அமைப்புச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 15

தமிழக மக்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்திலும், 

சட்டமன்றத்திலும் பல்லாண்டுகள் பணி செய்து வரும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குப் பாராட்டும், வாழ்த்தும்!

பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமை ஏற்று வழிநடத்தும் ஆற்றல் மிக்கவர் எனக் கண்டறிந்து, 1984_ஆம் ஆண்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக்கினார்.  நாடாளுமன்ற மாநிலங்களவையில் அனைவரும் வியக்கும் வண்ணமும், பாராட்டும் வகையிலும் அற்புதமான உரைகளை நிகழ்த்தி இந்திய நாட்டின் கவனத்தை <ர்த்தவர் நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.      

1989_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6_ஆம் நாள் தமிழ் நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினராக, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதல் முறையாகப் பொறுப்பேற்றார்.  

தந்தை பெரியார், பேரறிடர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் வழியிலும், சிந்தனையிலும் வந்த திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசியல் வாழ்வு என்பது வரலாற்று உண்மை.   

சட்டமன்றப் பணிகளில் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இரு நிலைகளிலும் பணியாற்றிய பேரனுபவம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு அமைந்துள்ளது.  

ஒரு சட்டமன்ற உறுப்பினர் எத்தகைய தயாரிப்புகளோடு அவைக்கு வர வேண்டும்; வாதங்களை எப்படி எடுத்து வைக்க வேண்டும்; மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தும் போது எத்தனை தூய உள்ளத்தோடு பேச வேண்டும் என்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.  முதலமைச்சர் பணியிலும், சட்டமன்ற உறுப்பினர் பணியிலும் தன்னலமற்று தமிழினத்தின் மேன்மைக்காகவே அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறது.  

முன்மொழிபவர்: டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., அவர்கள் கழக கொள்கை பரப்புச் செயலாளர் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்

தீர்மானம் _ 16

தேசிய சிந்தனையும், தேச பக்தியும், நீண்ட அரசியல் அனுபவமும், பன்மொழி ஆற்றலும், ஆளுமைத் திறனும் கொண்ட  கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்திய தேசத்தையே வழி நடத்த தகுதி படைத்தவர்!

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நீண்ட நெடிய அனுபவம் காரணமாக தமிழகம் பல்வேறு துறைகளில் இந்திய தேசத்திற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்குகிறது.  தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழக மக்களின் நலன்களுக்காக எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றார்கள்.  தமிழ் நாட்டின் மேன்மைக்காக பல்வேறு திட்டங்களை சட்டமாக்கி இருக்கிறார்கள்.  இலங்கைத் தமிழர்களின் சம உரிமைக்காகவும், நீதிக்காகவும் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றார்கள். 

இந்திய நாட்டின் நலனுக்கு விரோதமான இந்திய_அமெரிக்க எரிசக்தி ஒப்பந்தம், இந்திய எல்லையில் சீனாவின் ஊடுருவல், தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அராஜகச் செயல்கள் ஆகியவற்றை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் நம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். 

இந்திய கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை மதிப்பவர்; இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதன் வழியாகவே ஒன்றுபட்ட இந்தியா வலிமையோடு திகழ முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்; இளைய தலைமுறையினர் ஊக்குவிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு சம வாய்ப்பு தரப்பட வேண்டும், அதன் வழியாக இந்திய நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியோடு இருப்பவர், நம் 

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்கள். 

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அனுபவங்களையும், தேசிய சிந்தனைகளையும், நிகரில்லா தேச பக்தியையும், நீண்ட அரசியல் அனுபவத்தையும், பன்மொழி ஆற்றலையும், ஆளுமைத் திறனையும் கொண்டவர் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே.

இந்திய நாட்டிற்கு உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.  தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் இருந்து ஒருவர் 

இந்த நாட்டிற்குத் தலைமை ஏற்க காலம் கனிந்திருக்கிறது.     

இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்விற்கு ஏற்ற ஆட்சியை வழங்கக் கூடிய திறமையுடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம், பொன்மனச் செம்மல் 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பூரண நல்லாசியைப் பெற்ற, நம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே.  

இந்திய தேசம் என்பது பல்வேறு மொழிகளை பேசக் கூடிய, பல்வேறு மதங்களை பின்பற்றக் கூடிய, பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற நாடு.  இத்தகைய சிறப்புடைய இந்தியாவில் அனைத்து மொழிகளைப் பேசும் மக்களையும் கருணை உள்ளத்தோடு மதித்து, அனைத்து மதங்களையும் சமமாக பாவித்து, அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் தாயுள்ளம் கொண்ட ஒரே தேசியத் தலைவர் நம் 

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் 

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே.

உலக அரங்கில் இந்திய நாட்டை தலை நிமிரச் செய்யக் கூடிய நிர்வாகத்தை வழங்கும் ஆற்றல் நம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு மட்டுமே உண்டு.  உலகப் பெரும் ஜனநாயக நாடான இந்திய நாட்டை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒருவரால் மட்டுமே  முடியும்.   

எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தங்களின் அர்ப்பணிப்போடு கூடிய கடும் உழைப்பின் மூலம் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றி பெறச் செய்து, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களே 

இந்திய தேசத்தை வழி நடத்திச் செல்லத் தக்கச் சழ்நிலையை உருவாக்க 

இந்தப் பொதுக்குழு சபதம் ஏற்கிறது.  

முன்மொழிபவர் : ஆர். வைத்திலிங்கம் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

வழிமொழிபவர்கள் : அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும்.

இவ்வாறு பொதுக்குழு தீர்மானம் கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்