முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவயானி மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும்: குர்ஷித்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.20 - இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

தேவயானி கோப்ரகடே பொதுஇடத்தில் வைத்து கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டு, ஆடைகளை களைந்து சோதனை செய்யப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. தேவயானிக்கு எந்த வகையில் அமெரிக்கா மேலும் நெருக்கடி அளிக்கக் கூடாது என்பதற்காக அவரை ஐ.நா.,வின் நிரந்தர தூதராக நியமித்துள்ளது.  

இதற்கிடையில், தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார். மேலும், தேவயானி கைது நடவடிக்கை குறித்த முழு விபரங்களையும் அளிக்குமாறும் அமெரிக்காவிடம் கோரியுள்ளதாகவும் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா நட்புறவு இத்துடன் முடிந்து போகக்கூடிய ஒன்று இல்லை. இந்த நட்பிற்குப் பின்னால் நிறைய மூலதனமும் இருக்கிறது, எனவே தேவயானி பிரச்சினையை லாவகமாக அணுக வேண்டும் என்றும் குர்ஷித் தெரிவித்தார்.

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தால், இரு தரப்பு உறவு பாதிக்காது என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் குர்ஷித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அந்த நேரத்தில் தான் இல்லாததால் அவரது அழைப்பை ஏற்க முடியவில்லை என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போது பிலிப்பைன்சில் இருக்கும் ஜான் கெர்ரியுடன் இன்று மாலைக்குள் பேச முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் குர்ஷித் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்