முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியவில் நூலகம்: தமிழ்மகன் உசேன் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.21 - மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கலை விழா குலிம் சாலையில் புக்கிட் மெர்டஜாம் என்ற இடத்தில் செயின்ட் ஆன்ஸ் கலை அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வையொட்டி ஏழை மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் எம்.ஜி.ஆர். கணினி மையத்தினை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ஓய்.பி.ராமசாமி திறந்து வைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரால் அம்மா இ நூலகத்தினை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் திறந்து வைத்தார்.

மாலையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். கலை விழாவிற்கு பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தலைமை வகிக்க, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மேடையில் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டு பல்வேறு நடனக்கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். எம்.ஜி.ஆர். தோற்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த விழாவிற்காக மலேசியா முழுவதும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்றத்தினர், அ.தி.மு.க. நிர்வாகிகள் (பாக்யநாதன் உட்பட) ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்தும் (சென்னை, கேவை, புதுவை) ஏராளமானோர் வந்திருந்தனர். 

விழாவில் எம்.ஜி.குமார் வரவேற்புரையாற்றிட, பாலன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அம்மா இநூலகம் திறப்பு விழாவிலும் எம்.ஜி.ஆர். கலை விழாவிலும் அ.தமிழ்மகன்உசேன் சிறப்புரையாற்றியபோது எம்.ஜி.ஆர். சிறப்புகளை பற்றியும், 1956_ல் தமிழ்நாட்டில் முதன்முதலாக எம்.ஜி.ஆர். தொடங்கியதையும், 1972_ல் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கியபோது தமிழ்நாட்டிலேயே தனது முதல் ஆதரவைத் தெரிவித்து தாமரை கொடி ஏற்றியதையும் நினைவு கூர்ந்தார்.

கட்சியின் (அ.தி.மு.கா.) முதல் குமரி மாவட்டச் செயலாளராக எம்.ஜி.ஆர். என்னை நியமித்தார். அதிலிருந்து 40 ஆண்டுகள், புரட்சித்தலைவரைப் போலவே புரட்சித்தலைவி அம்மாவும் என்னை அன்பு காட்சி ஆதரித்தார். அவரது கருணையுள்ளத்தால் நாந் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பதவி நியமனம் செய்யப்பட்டேன். கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரானேன். என்னை தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக்கினார். இப்படி அவர் கோடிக்கணக்காந எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களையும் தாயுள்ளத்தோடு அன்பு செலுத்தி அரவணைத்து காப்பாற்றி வருகிறார். இந்திய துணை கண்டித்தில் இன்று வேறு எந்த தலைவரிடத்திலும் கான முடியாத பண்பாகும்.

தமிழகத்திலுள்ள மக்களை மட்டுமின்றி இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் ஆதரவாக அவர்கள் நல்வாழ்விற்கு ஆதாரமாகவும் விளங்கி வருகின்ற ஒரே தலைவி ஜெயலலிதாதான். இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக சட்டமன்றத்திலும் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றி ராஜபக்சேவுக்கு எதிராக உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் தலைவர் அவர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் பிரதமர் அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.

கல்விக் கண் தந்த கர்மவீரர் காமராசருக்குப் பின் கல்வியை மேம்படுத்திய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப்பின் கல்வியின் மேம்பாட்டுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா அரும்பாடுபட்டு வருகிறார். ப்ளஸ் ஒன் ப்ள்ஸ்டூ மாணவ, மாணவியர் அனைவருக்கும் விலையின்றி மடிக்கணினி (லேப்டாப்) சீருடைகள் புத்தகங்கள் கல்வி கட்டணம் மாணவ செல்வங்களின் எதிர்காலம் தமிழ்நாட்டில் சிறப்பானதாக இருக்கிறது என்று விரிவாக எடுத்துச் சொன்னார் அ.தமிழ்மகன்உசேன்.

இறுதியுரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி எம்.ஜி.ஆர். மீது தனக்குள்ள பற்றுதலை பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லி வெளிப்படுத்தினார். மேலும் அவர் ராஜபக்சேயின் கொடுமை ஆட்சிக்கு எதிராக காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என தீர்மானம் போட்ட முதல்வர் ஜெயலலிதா துணிவான செயலைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் தமிழ்மகன்உசேன் மூலமாக தமிழக முதல்வருக்கு என் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்