முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலில் 12 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி 0

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மே.20 - நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களிலும், அ.தி.மு.க. மட்டும் 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா 3 வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தலில் 12 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 

2006 ல் மைனாரிட்டியாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பதவியேற்றது முதல் தமிழக நலனில், மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனது குடும்ப நலனிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வாங்குவதையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார். கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் தி.மு.க.வினர் அராஜகங்களை அரங்கேற்றினர். இது தவிர, அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன. ஏழை, எளிய நடுத்தர மக்கள் ஒருவேளைக்கு கூட நல்ல சாப்பாடு சாப்பிடுவது கஷ்டமாகி விட்டது. 

இத்துடன் தினம் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் துன்பம் அடைந்து வந்தனர். பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தொழில்களும் பாதிப்படைந்தன. சிறு, குறு தொழில் அதிபர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். 

அனைத்து பகுதியிலும் தி.மு.க.வினரின் ஊழல் பன்மடங்கு அதிகரித்தது.கட்டப் பஞ்சாயத்து அடிதடி அராஜகங்களும் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தலைவிரித்தாடின. எங்கும் ஊழல், எதிலும் ஊழல், ஊழல் இல்லாத இடமோ, துறையோ இல்லாத அளவிற்கு ஊழல் மிகவும் மலிந்து விட்டது. இது தவிர மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ஏழை, எளியவர்களிடம் நிலங்களை அபகரித்தல், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தி.மு.க.வினரின் காண்டிராக்ட் ஊழல், எடுத்த பணிகளை தரமற்றதாக செய்து கொள்ளை. தி.மு.க.வின் ஊழலுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஸ்பெக்ட்ரம் ஊழலும், சினிமாத் துறையில் கருணாநிதியின் குடும்பத்தினரின் அட்டூழியமும், கேபிள் கொள்ளை ஆகியவற்றால் தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. 

இது தவிர பெண்கள் தனியாக ரோட்டில் நடமாட முடியவில்லை. வழிப்பறி திருடர்களின் அராஜகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பூட்டிய வீடுகளில் உடைத்து கொள்ளை, நகைக் கடைகளை உடைத்து கொள்ளை, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள், முதியோர்கள் கொலை செய்யப்பட்டு நகை, பணம், பொருட்கள் கொள்ளை ஆகியன தினம் நடந்து வந்தது. தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்ற அளவிற்கு அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தி.மு.க.வை தோற்கடிக்கவும் முடிவு செய்திருந்தனர். 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலை போன்றே பல இலவசங்களை தேர்தல் அறிக்கையாக கருணாநிதி வெளியிட்டார். பல்வேறு பிரச்சினைகளுக்கு பின்பு காங்கிரசுக்கு 63 இடங்களை கொடுத்து பா.ம.க. விடுதலை சிறுத்தைகளுக்கும் கணிசமான இடங்களை கொடுத்து பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். 

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. இலவச கேஸ் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதாலும், தேர்தல் அறிக்கையாலும் கூட்டணி கட்சிகளின் பலத்தாலும் தேர்தலில் மக்கள் தனக்கு ஓட்டளிப்பார்கள், வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தில் விட்டு வைத்த இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும், தமிழக மக்களின் உழைப்பை சுரண்டவும் கருணாநிதி திட்டமிட்டிருந்தார். 

ஆனால் 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் தி.மு.க வுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் இருந்தனர் என்பதை கருணாநிதியால் கணிக்க இயலவில்லை. அரசியலில் சாணக்கியர் என்று அவரது கட்சியினரால் கூறப்படும் கருணாநிதியால் 2011 ல் தமிழக மக்களின் மன நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி தி.மு.க.கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்தனர். தி.மு.கவின் செல்லப் பிள்ளைகள் என அழைக்கப்பட்ட அரசு ஊழியர்களும் தி.மு.க.வினரால் பாதிக்கப்பட்டதால் அவர்களும் தி.மு.க.வை எதிர்க்க முடிவு செய்தனர். 

ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல், புதிய இளம் வாக்காளர்களை பாதித்ததால் அவர்களும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க தயாராகினர். இவற்றை எல்லாம் அறியாத கருணாநிதி தி.மு.க. கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று

 மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வந்தார். தேர்தல் முடிந்த பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சி தலைவர்கள் தினம் ஒருவராக கருணாநிதியை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அறிக்கை வெளியிட்டு கருணாநிதிக்கு மன ஆறுதலை ஏற்படுத்தி வந்தனர். 

தேர்தல் நாளன்று மக்கள் மாபெரும் மவுன புரட்சியை ஏற்படுத்தினர்.ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கப்பட்டாலும் காலை 7 மணிக்கே பூத்களில் மக்கள் வரிசைகளில் நிற்க தொடங்கினர். காலையில் வரத் தொடங்கிய மக்கள் மாலை வரை சாரைசாரையாக கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக ஓட்டளித்து சென்றனர். இது வரை ஓட்டளிக்க வெளியில் வராத மேல்தட்டு மக்களும் இந்த தேர்தலில் காலை 7 மணிக்கெல்லாம் ஓட்டு சாவடிக்கு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்த நிலையிலும் பூத்துக்கு 50 முதல் 300 பேர் வரை ஓட்டளிக்க வரிசையில் நின்றனர். அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு சில பூத்துகளில் இரவு 9 மணி வரை மக்கள் ஓட்டளித்தனர். 

தமிழக தேர்தல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்த தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரித்தது. ஏற்கனவே ஆட்சிக் கட்டில் தனக்கே என பகல் கனவில் இருந்த கருணாநிதியும், அவரது சகாக்களும், ஓட்டு சதவீதம் அதிகரித்த போதெல்லாம் தி.மு.கவே ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் இந்த முறையும் தி.மு.க. ஆட்சியை பிடிப்பது உறுதி என புளகாகிதம் அடைந்து இருந்தனர். மே 13 அன்று ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டன. அதில் மக்களின் மவுன புரட்சி அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. அ.தி.முக. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 

 

12 மாவட்டங்களில் தி.மு.க. 0:

 

தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக வென்ற 12 மாவட்டங்கள் விபரம்:

மதுரை(10), திருவள்ளூர்(10), காஞ்சிபுரம்(11), தருமபுரி(5), சேலம்(11), நாமக்கல்(6), ஈரோடு(8), திருப்பூர்(8), கோவை(10), கடலூர்(9), நாகப்பட்டினம்(6), புதுக்கோட்டை(6). ஆகிய இடங்களில் அ.தி.மு.க கூட்டணி ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது. இந்த 12 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது. 

 

14 மாவட்டங்களில் தி.மு.க தலா 1:

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி  7, தி.மு.க. கூட்டணி 1

விழுப்புரத்தில் அ.தி.மு.க. கூட்டணி 10, தி.மு.க கூட்டணி 1

நீலகிரியில் அ.தி.மு.க. கூட்டணி 2, தி.மு.க.கூட்டணி  1

திருச்சியில் அ.தி.மு.க. கூட்டணி 8, தி.மு.க. கூட்டணி 1

பெரம்பலூரில் அ.தி.மு.க. தி.மு.க. கூட்டணி தலா 1

அரியலூரில் அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணி தலா 1

தஞ்சாவூரில் அ.தி.மு.க, கூட்டணி 7, தி.மு.க.கூட்டணி  1

தேனியில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1

சிவகங்கையில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி  1

விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி 6, தி.மு.க. கூட்டணி 1

தூத்துக்குடியில் அ.தி.மு.க. கூட்டணி 5, தி.மு.க. கூட்டணி 1

திருநெல்வேலியில் அ.தி.மு.க. கூட்டணி 9, தி.மு.க. கூட்டணி 1

இடத்திலும் வெற்றி பெற்றன. இந்த 14 மாவட்டங்களிலும் தி.மு.க. கூட்டணிக்கு தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 

 

4 மாவட்டத்தில் தி.மு.க. தலா 2. :

 

சென்னையில் அ.தி.மு.க. கூட்டணி  14, தி.மு.க. கூட்டணி 2

வேலூரில் அ.தி.மு.க. கூட்டணி 11, தி.மு.க. கூட்டணி 2

திருவாரூரில் அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணி தலா 2

கன்னியாகுமரியில் அ.தி.மு.க. கூட்டணி 4, தி.மு.க. கூட்டணி 2

இந்த 4 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் தி.மு.க கூட்டணி 3 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. 

நடந்து முடிந்த 14 வது சட்டசபை தேர்தலில் 12 மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி முழுமையாகவும், மீதமுள்ள 32 மாவட்டங்களில் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க கூட்டணியே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago