முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைக்கப்படும்: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.21 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைக்கப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும் என்று உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் நேற்று உணவுத்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது அதிகாரிகள் மத்தியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது:_

எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு புழுங்கலரிசி, பச்சரிசி, சர்க்கரை மற்றும் பருப்பு வகைகள்,பாமாயில் ஆகியன போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவ்வித விடுதலுமின்றி வழங்கப்பட வேண்டுமென அலுவலர்களை அறிவுறுத்தினார்.  பொங்கல் பண்டிக்கைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் 60 சதவீதம் முன் நகர்வு 31.12.2013_க்குள்ளும், மீதமுள்ள 40% 05.01.2014க்குள்ளும் அங்காடிகளுக்கு நகர்வு செய்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். 

மத்திய அரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டினை தொடர்ந்து குறைத்துக் கொண்டே வந்து முழுத் தேவையான 65,140 கிலோ லிட்டருக்கு பதிலாக தற்போது 29,056 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.  இருப்பினும் எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ள விவரத்தை குடும்ப அட்டைகளில் பதிவு செய்து மண்ணெண்ணெய் தேவை உரியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென்று அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

முதல்வரின் உத்தரவின்படி 01.06.2011 முதல் 30.11.2013 வரை 8 இலட்சத்து 56 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மேலும், இக்காலத்தில்   2 இலட்சத்து 40 ஆயிரம் போலிக் குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி தங்களுக்குரிய ஒதுக்கீட்டின்படி அத்தியாவசியப் பொருள்களைப் பெறும் வகையில் கடந்த இரண்டரை வருடங்களில்  368 முழுநேர கடைகளும் 719 பகுதி நேரக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய அட்டைகள் உரிய விசாரணைக்குப் பின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

நடப்பு 2013ம்  ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்ட குடும்ப அட்டைகளின் புழங்கு காலம் 31.12.2013 அன்றுடன் முடிவடைகிறது.  தற்போது உடற்கூறு முறையிலான தேசிய மக்கள் தொகை பதிவாளர் கணக்கெடுப்பு பதிவுகளின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை பதிவாளரின் கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்து தகவல் தொகுப்பினை பெற காலதாமதமாகும் என்பதால் மின்னணு குடும்ப அட்டை 2014_2015_ல் தான் வழங்க முடியும் என, 

கருதப்படுகிறது.  எனவே 31.12.2013 அன்றுடன் முடிவடைய உள்ள புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகள் செல்லத்தக்க காலத்தை 01.01.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். எனவே தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் 2014_ஆம் வருடத்திற்கும் உள்தாள் ஒட்டப்பட்டிருப்பதால், இதனையே பயன்படுத்திக்கொண்டு அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர்தெரிவித்தார்.நடப்பு காரீப் பருவம் 2013_14_ல் மத்திய அரசு நெல்லுக்கு வழங்கியுள்ள குறைந்த பட்ச ஆதாரவிலைக்குமேல் மாண்புமிகு அம்மா அவர்கள் சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 70/_ ரூபாயும், சாதாரக நெல்லுக்கு 50/_ ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம் எதிர்வரும் சம்பா நெல் கொள்முதல் பருவத்தில் சுமார் 150 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 20 வெரை <ரப்பத தளர்வுடனும், மழையினால் சேதமடைந்த நிறம் மாறிய நெல் வகைகளை 5 சதம் வரையிலும் உரிய தரப்பிடித்தத்துடன் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கு தேவைப்படும் இடங்களில் எல்லாம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.  இதன்படி மண்டல மேலாளர்கள் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித சுணக்கமுமின்றி கொள்முதல் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். 

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்