முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லட்சிய திராவிட முன்னேற்ற கழக கூட்டணி: ராஜேந்தர்

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.21 - காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எந்த கட்சியும் கூட்டணி அமைக்க அழைத்தால் அதில் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் இடம் பெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்..

நடிகரும், இயக்குனரும், லட்சிய திமுக கட்சியின் நிறுவனருமான டி. ராஜேந்தர் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் நேற்று  காலை புகார் மனு கொடுக்க வந்தார். 

அப்போது நிருபர்களின் கேள்விக்கு டி.ராஜேந்தர் பதிலளிக்கையில்நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பெரிய கட்சிகள் இன்னும் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. அதற்குள் எங்களை போன்ற சிறுகட்சிகள் எப்படி முடிவு செய்ய முடியும்.காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிடுவீர்களா?

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எந்த கட்சியும் கூட்டணி அமைக்க அழைத்தால் அக்கட்சியை கண்டிப்பாக லதிமுக ஆதரிக்கும்.

தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?

தேமுதிக தலைமை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைக்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும்'இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து புகார் அளிக்க சென்ற டி.ராஜேந்தர், கமிஷனர் ஜார்ஜ் இல்லாததால் புகார் அளிக்காமல் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்