முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மருத்துமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே.20 -  வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் செவிலியர்களால் இந்திய மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை ஏற்படுகிறது.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இணையாக நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்திய மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்தபடி ஒவ்வொரு ஆஸ்பத்திரிகளிலும் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு பணிவிடை செய்ய ஒரு நர்சும் பொது நோயாளிகளுக்கு பணிவிடை செய்ய 6 நர்சுகளம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கை செவிலியர்கள் இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ மனைகளில் 20 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் பணியில் இருப்போர் 10 லட்சம் செவிலியர்கள் தான். அதாவது 500 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் மட்டுமே உள்ளார். இதற்கு காரணம் வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைப்பதால் தான் நிறைய செவிலியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் உள்நாட்டில் செவிலியர்கள் பற்ஆக்குறை ஏற்பட்டுள்ளது. தீக்காயத்தால் அவதிப்படும் நோயாளிகளில் 50 சதவீத பேரும் அறுவை சிகிச்சைக்குப்பின் 30 சதவீத நோயாளிகளும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு பணிவிடை செய்ய நர்சுகள் இல்லாததால் இறந்துவிடுகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. தமிழ்நாட்டிலும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை சமாளிப்பதற்காக தமிழ்நாட்டில் புதிதாக 150 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் 150 பயிற்சி பள்ளிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்