முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது மூலம் எஸ்.எம்.எஸ்.: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், டிச. 21 - செல்போன் டவர், சிக்னல் இல்லாமல் மதுவை பயன்படுத்தி எஸ்.எம்.எஸ். அனுப்பும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். 

உலகம் முழுவதும் விரைந்து செய்தி அனுப்ப முன்பு மோர்ஸ் என்பவரின் தந்தி (டெலிகிராம்)பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. 

இப்போது சாதாரண போன், பேஜர், செல்போன் என அடுத்த கட்டத்துக்கு தொழில் நுட்ப வளர்ச்சி சென்றது. இதன் மூலம் எஸ்.எம்.எஸ். செய்திகள் எம்.எம். 

எஸ். எனப்படும் படங்கள் அனுப்பப் படுகின்றன. 

ஆனால் செய்திகள், படங்களை அனுப்ப செல் போன் டவர் சிக்னல் இருப்பது அவசியம். சிக்னல் கிடைக்காத மலை பிரதேசங்கள், கடல் வழிகள், ஆழமானசுரங்கங்கள் ஆகியவற்றில் செய்திகளை அனுப்ப முடியவில்லை. 

இந்த பிரச்சினைக்கு நியூயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர். ரசாயன முறையில் எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்ப முடியும் என்று அவர்கள் கண்டறிந்து உள்ளனர். 

இது குறித்து பேராசிரியர் ஆண்ட்ரூ கூறுகையில், வோட்கா மதுவை பயன்படுத்தி அதன் ஆவியில் ஏற்படும் ஆல்ஹகால் மூலக் கூறுகளில் ஹாய் கனடா என்ற எஸ்.எம்.எஸ். செய்தியை முதல் முறையாக அனுப்பி சோதனை செய்தோம். 

சுமார் 10 மீட்டர் தொலைவில் ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த ரிசீவர் மூலமாக அந்த மூலக் கூறை பிரித்து செய்தியை பெற்றுள்ளோம். 

இது வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றால் ஆழமான சுரங்கங்களில் விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் போது செல்போன் டவர் இல்லாமலேயே செய்திகளை அனுப்பி பெற முடியும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்