முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மாகாண தேர்தலில் சிங்கள நடிகை நதீஷா போட்டி

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

கொழும்பு, டிச.22 - இலங்கை மாகாண தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடிகை நதீஷா போட்டியி டுகிறார். இலங்கையை சேர்ந்த சிங்கள சினிமா நடிகை நதிஷா ஹேமமாலி. இவர் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். மிஸ்டர் ராஸ்கல் என்ற தெலுங்கு படத்தி லும் நடித்துள்ளார். இந்த படத்தை டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்துள்ளார். நடிகை நதீஷா அரசியலில் குதித்துள்ளார். அங்குள்ள எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியில் இவர் சேர்ந்துள்ளார். இலங்கையில் தெற்கு மாகாண கவுன்சில் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நடிகை நதீஷா போட்டியிடுகிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் நடிகைகள் அனார்கலி, கீதா குமாரசி8கே ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நடிகை உபேக்ஷ" சுவர்னமாலி எம்.பி.யாக உள்ளார். இவர்களின் கவர்ச்சியை முறியடி க்க வே நதீஷாவை தேசிய கட்சி களம் இறக்குகிறது. அரசியல் எனக்கு புதிதல்ல. எனது குடும்பத்தினர் நெடுங்காலமாக அரசியலில் உள்ளனர். அவர்கள் வழியில் நானும் அரசியலுக்கு வந்துள்ளேன். எனக்கு தெலுங்கு மொழி புரியவில்லை. அதனால் சரியாக உச்சரிக்க கஷ்டப்பட்டேன். இலங்கையை விட்டு நெடுங்காலம் வெளியே தங்கி இருக்க முடியவில்லை என்றார். 

நதீஷா பற்றி டைரக்டர் உதயகுமார் கூறு கையில், நதீஷாவிந் நடிப்பை பாராட்டினார். எனது டைரக்ஷனில் நடித்த நடிகைகள் அரசியக்கு சென்று விடுகிறார்கள் என்றார்.

              

      

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்