முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப் மீது பாகிஸ்தான் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமபாத், டிச.22 - நவாஸ்  ஷெரீப் மீது பாகிஸ்தான் வழக்கறிஞர் ஸ்டீவன் கே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை அரசியல் ரீதியாக பழி வாங் கவே நவாஸ் ஷெரீப் அரசு தேச துரோக குற்றச்சாட்டை முஷாரப் மீது சுமத்தி உள்ளது. இந்த வழக்கில் கோர்ட் விசாரணை நேர்மையக நடக்க வாய்ப்பு இல்லை என்று வக்கீல் ஸ்டீவன் கே புகார் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்றது. அப்போது முஷாரப் நாடு திரும்பினார். பெனசிர் பூட்டோ கொலை, நீதிபதிகளை ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்தது, உள்பட பல வழக்குகள் முஷாரப் மீது இருந்ததால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோர்ட் உத்தரவுப்படி முஷாரப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பிறகு கைது செய்யப்பட்டார்.

தேச துரோக வழக்கில் இம்மாதம் 24_ம் தேதி முஷாரப் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் முஷாரப் விடுத்துள்ள அறிக்கையில், நான் நாட்டை விட்டு எங்கும் ஓடிவிட மாட்டேன். நான் செய்தது அனைத்தும் நாட்டுக்காக செய்ததுதான். என்னை பழிவாங்குவதற்காகவே என் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். முஷாரப் வக்கீல் ஸ்டீவன் கே லண்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:

1999_ம் ஆண்டு நவாஷ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்ததற்காக அரசியல் ரீதியாக பழி வாங்கவே முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் 11_ம் தேதி நடைபெற்ற தாக்குதலை யொட்டி அனைவரின் ஒப்புதலோடுதான் முஷாரப் தீவிரவாத ஒழிப்பு நடவடிக் கை களில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தலையிட வேண்டும். இதுகுறித்து ஐ.நா.வில் முறையிட உள்ளோம் என்றார்.               

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்