முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமிஷன் உயர்வு: பெட்ரோல் பங்க் அடைப்பு போராட்டம் வாபஸ்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களுக்கான கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, முழு அடைப்புப் போராட்டத்தை பெட்ரோலிய விற்பனையாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். விற்பனைக் கமிஷனை உயர்த்த வேண்டும், ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 22, 23- தேதிகளில் பெட்ரோல் பங்க்குகளில் மின்விளக்கை அணைத்தும், டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பங்க்குகளையும் மூடுவதற்கும் அகில இந்திய பெட்ரோலிய வணிகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று தமிழக பெட்ரோல் பங்க்குகளும் போராட்டத்தில் பங்குபெறும் என அறிவித்திருந்தன. இந்நிலையில், பெட்ரோல்,டீசல் விற்பனையாளர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 10 பைசாவும் உயர்ந்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக பெட்ரோலுக்கு லிட்டருக்கு 21 பைசா என்ற அளவிலும், டீசலுக்கு 10 பைசா என்ற அளவிலும் கூடுதல் கமிஷன் கிடைக்கிறது. எனவே, அறிவிக்கப்பட்டிருந்த போராட்டங்களை ரத்து செய்துள்ளோம் என்று தமிழ்நாட்டு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயாலாளர்  எம்.ஹதர் அலி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago