முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு - ராமநாதபுர அ.தி.மு.க செயலாளர்கள் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.23 - ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட  அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களாக ஆர்.என்.கிட்டுசாமியும், எம்.ஏ. முனியசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_

ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமியும், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக எம்.எ. முனியசாமியும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

ஈரோடு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.கிட்டுசாமிக்கும், ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எ.முனியசாமிக்கும் கழக உடன்பிறப்புக்கள் முழு ஒத்துழைப்பு நல்லிகிடக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்