முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலின் கொள்முதல் ரூ.3 உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர்

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.24 - நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு பாலின் கொள்முதல் ரூ3_க்கு உயர்த்த வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கையினைப் பரிசீலிக்கும் பொருட்டு, நேற்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் இரா. வைத்திலிங்கம், பால் வளத் துறை அமைச்சர் மாதவரம் வி. மூர்த்தி, ஆவின் நிறுவனத் தலைவர் அ. மில்லர், அரசு தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் இரா. சண்முகம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீனளத் துறை செயலாளர் டாக்டர் எஸ். விஜயகுமார், ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால்,  மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பின், பசுந் தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, பணியாளர்களின் சம்பளம், கறவை மாடுகளின் விலை மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டும்; அண்டை மாநில கூட்டுறவு பால் சங்கங்களும், தனியார் பால் நிறுவனங்களும் பாலின் விலையையும், பால் கொள்முதல் விலையையும் உயர்த்தியுள்ளதைக் கருத்தில் கொண்டும்; பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டும்; பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர நான் உத்தரவிட்டுள்ளேன். 

இதன்படி, பசும் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3  ரூபாயாகவும், எருமைப் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.1.2014_ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இந்த பால் கொள்முதல் உயர்வினையடுத்து, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 20 ரூபாயிலிருந்து  23 ரூபாயாகவும்,  எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு  28 ரூபாயிலிருந்து 31 ரூபாயாகவும்  உயர்த்தி வழங்கப்படும். இதன் பயனாக தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பின் கீழ் உள்ள சுமார் 22.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.  

இந்தக் கொள்முதல் விலை உயர்வால் ஓர் ஆண்டிற்கு 273 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர். கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு, பால் விற்பனை விலை உயர்த்தப்படமாட்டாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்