முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவயானி மீதான வழக்குகளை கைவிடக் கோரி மனு

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டி.24 - தேவயானி மீதான விசா மோசடி வழக்கை திரும்பப் பெறக் கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அலுவலகத்திற்கு இணையம் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மனுவில் கடந்த 12-ஆம் தேதியன்று இந்தியப் பெண் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் வைத்து கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டதும் பின்னர் அவர் சோதனை செய்யப்பட்ட முறையும் கண்டனத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற சம்பவங்கள் இந்திய-அமெரிக்க உறவை பாதிக்கும் எனவும் கைது நடவடிக்கையால் ஏற்கெனவே தேவயானி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் மீதான குற்ற வழக்கை திரும்பப் பெற வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis