முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: முதல்வர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.25 - இலங்கை சிறையில் வாடும் 210 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். நாகப்பட்டினம், புதுக் கோட்டை, ராமநாதபுரம் மீனவ சங்கங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். பின்னர் மீனவப் பிரதிநிதிகள் கூறியதாவது: 

வீரமுத்து (அக்கரைப்பேட்டை) இலங்கை படையினர் பிடித்துச் சென்ற 72 விசைப் படகுகள் மற்றும் 210 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எணவே மீனவர்களை விடுவிக்க அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசிடம் கூறி நடவடிக்கை எடுத்து வருவதாக முதல் வர் தெரிவித்தார். இலங்கை மீனவர்களுக் கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்த விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் ஜெயலலிதா உறுதியளித்தார். மீனவர்களை விடுவிக்கக் கோரி நடைபெற்று வரும் உண்ணா விரதம் தொசர்பாக அனைவரிடமும் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்.

பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு இலங்கை, தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான காலவரையை நிர்ணயிக்க வேண்டும். 

ராஜா (ராமநாதபுரம்)பாரம்பரிய இடத்தில் பிரச்சனையின்றி மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். இலங்கைச் சிறையிலிருந்து மீனவர்களையும், படகுகளையும் உ

டனடியாக  மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், தலைமைச்  செயலாளர்ஷீலா பாலகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். 

                                             

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்