முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாதாம்: ஞானதேசிகன்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.25 யார் எதிர்த்தாலும், யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை  அசைக்க முடியாது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகன் கூறினார். சத்தியமூர்த்தி  பவனி ல் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசியதா வது: 

நாடு முழுவதும் சிறுபான்மை மத மக்களு க்கு அரணாக இருப்பது காங்கிரஸ் மட்டும்தான். ஒருநாள் அழைப்பில் இந்த அளவு மக்கள் திரண்டிருப்பதை பார்க்கும் போது காங்கிரஸின் வலிமை புரிகிறது. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை அனைத்தும் அன்பையும், சமாதானத்தையுமே போதிக்கின்றன. கோபம் கொள்ளாமல்  பொறுமையாக அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது இயேசுவின் போதனைகளில் முக்கியமானது. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லை யோ, எனக்குப் பொருந்துகிறது.

இந்த பதவிக்கு வரும் முன்பு முகம் சிவக்கும் அளவுக்கு கோபம் வரும். இப்போது என்னைப் போல பொறுமைசாலியை பார்க்க முடியாது. நான் என்ற கொள் கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம் என்பதே உடன்பாடு. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பிக் காட்டு என்றார் இயேசு. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுவேன். முதுகையும் காட்டத் தயாராக உள்ளேன். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி பலம் உள்ளது. அது 2014_ம் ஆண்டு தேர்தலில் வெளிப்படும். யார் எதிர்த்தாலும், யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை  அசைக்க முடியாது என்று ஞானதேசிகன் கூறினார்.                              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago