முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரும்பு விலையை பரிசீலனை செய்ய வைகோ கோரிக்கை

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,டிச.26 - தமிழக அரசு அறிவித்த கரும்பு கொள்முதல் விலையை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று வைகோ கோரியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யும்போது தமிழக அரசு, விவசாயிகள் மற்றும் கரும்பு ஆலை நிர்வாகம் ஆகிய முத்தரப்புக் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டு விலை நிர்ணயம் செய்வது தான் வழக்கமான நடைமுறையாகும். ஆனால், நடப்பு ஆண்டில் முத்தரப்புக் கூட்டம் நடத்தாமலேயே தமிழக முதல்_அமைச்சர் கரும்பு கொள்முதல் விலையை அறிவித்திருப்பது ஏற்கக் கூடியதல்ல.

மேலும், உள்நாட்டில் கரும்பு விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ள போது மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகளின் துயரம் தொடர்ந்து கொண்டே உள்ளது.எனவே, தமிழக அரசு அறிவித்த கரும்பு கொள்முதல் விலையை மறுபரிசீலனை செய்து நடப்பு ஆண்டில் கரும்பு ஒரு டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ.3,500 என விலைநிர்ணயம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்