முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசைப்படகு கட்ட மானியம்: மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.26 - மீனவர்கள் குழுவாக இருந்து புதிய விசைப்படகு கட்டுவதற்கு மானிய உதவி அளிக்கப்படுகிறது. அதற்காக மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

தூண்டில்  மற்றும் செவுள்வலை மூலம் சரை மீன்பிடிப்பிற்கு ஏதுவாக மீனவர்கள் புதிய மீன்பிடி  விசைப்படகுகளை கட்டுதலுக்கான 50 சதம் மானிய உதவி வழங்கும் திட்டம்

அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள  மீன்வள ஆதாரங்களை மிக நீண்டகாலம் பயன்படுத்திடவும், து"ண்டில் மூலம் சரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டும் மீனவர்களுக்கான ஒரு புதிய திட்டத்தினை அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், து"ண்டில் மூலம் சரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய  மீன்பிடி விசைப்படகினை கட்டிட படகொன்றிற்காகும்  செலவினத்தில்  50 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.30.00 இலட்சம் வரை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும்.  

தமிழகத்தை சார்ந்த முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை மீன்வளத்துறையின் இணையதளமான சூசூசூ.க்டுஙூகீடீஙுடுடீஙூ.சிடூ.கிச்சு.டுடூ _ லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை  துணை / இணை இயக்குநர்கள் மற்றும் கடலோர மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில்  அலுவலக நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை  மீன்துறை இயக்குநர், நிர்வாக அலுவலகக் கட்டடங்கள், டி.எம்.எஸ் வளாகம்,  தேனாம்பேட்டை,  சென்னை_600 006  என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது  நேரடியாகவோ 10.02.2014 பிற்பகல்  5.00 மணிக்குள் விண்ணப்பிக்க  வேண்டும்.  பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு  மாநில அளவிலான  பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.

மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அல்லது மண்டல மீன்துறை துணை / இணை  இயக்குநர் அலுவலகங்களை நேரிலோ அல்லது  சம்பந்தப்பட்ட அலுவலக தொலைபேசி மூலமாகவோ   தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறுஅந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்