முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனாமி தாக்குதலின் 9 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோயில், டிச.26 - சுனாமி தாக்குதலின் 9 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள், மவுன ஊர்வலங்கள் நடக்கின்றன. கடந்த 2004- ம் ஆண்டு டிசம்பர்  மாதம் 26 ம் தேதி இந்திய  பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் கோர தாண்டவத்துக்கு தமிழகத்திலும் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். குமரி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் குழந்தைகள், பெண்கள் என 800 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 9 ஆண்டுகள் ஆனாலும் இந்த சம்பவத்தின் சோக நிகழ்வுகள் இன்னும் அனைவரின் நெஞ்சையும் கலங்கடித்த வண்ணம் உள்ளன. சுனாமி தாக்குதலின் நினைவு தினம் இன்று கடற்கரை கிராமங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்வதில்லை. சுனாமியில் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் மெழுகுவர்த்திகள், ஊது பத்திகள் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தகின்றனர். மவுன ஊர்வலங்களும் நடக்கின்றன. மேல மணக்குடி, குளச்சல், கொட்டில்பாடு, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுனாமி நினைவு தினத்தையொட்டி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனை போன்று தமிழகம் முழுவதும் கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தின நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்