முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

150 ரூபாய் நாணயம் விரைவில் வருகிறது

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, பிப். 24 - 150 ரூபாய் நாணயத்தை விரைவில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரிவிதிப்பு முறை இந்தியாவில் அமுலுக்கு வந்து 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் இந்த நாணயம் வெளியிடப்படுகிறது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படும். 150 ரூபாய் நாணயம் இந்தியாவில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை. இதுதொடர்பான அறிவிக்கையை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது. 

வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றின் கலவையாக இந்த நாணயம் இருக்கும். இதில் சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். சாணக்கியர் மற்றும் தாமரைப்பூ ஆகியன இந்த நாணயத்தில் இடம்பெற்றிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!