முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காள முதல்வராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றார்

சனிக்கிழமை, 21 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, மே.21 - மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் எம்.கே. நாராயணன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மற்றம் மே மாதங்களில் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் இடதுசாரி கட்சிகள் ஓரணியாகவும் காங்கிரஸ் - திரிணமுல் காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன. 

இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான  திரிணமுல் காங்கிரஸ் கட்சி 184 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை பெற்றது. இதை  அடுத்து கடந்த 34 ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தை ஆட்சி  செய்து வந்த இடதுசாரி கட்சிகளின்  ஆதிக்கம் வீழ்ச்சி அடைந்தது.

திரிணமுல்  காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவராக மம்தா பானர்ஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மேற்குவங்க  கவர்னர் எம்.கே. நாராயணனை சந்தித்தார். புதிய அரசை அமைக்கும்படி மம்தாவை கவர்னர் கேட்டுக்கொண்டார். 

இந்த நிலையில் மம்தா பானர்ஜி தனது மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்கு வங்காளத்தில் இடது சாரிகள் அல்லாத புதிய அரசு பதவி ஏற்கும் விழா நேற்று கவர்னர் மாளிகையில் நண்பகல் 12.55 மணிக்கு  தொடங்கியது. 

அப்போது புதிய அரசை அமைப்பது தொடர்பாக கவர்னர் வழங்கிய உத்தரவை தலைமை செயலாளர் படித்தார். பிறகு பதவி ஏற்க மேடைக்கு வருமாறு அழைத்தார். மம்தா பானர்ஜி இரு கரங்களையும் கூப்பி வணக்கம் செலுத்தியபடியே மேடைக்கு சென்றார். அப்போது விழாவில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு மம்தாவுக்கு கவர்னர் எம்.கே. நாராயணன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக பதவியேற்ற மம்தா, வங்காள மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்காமல் தனது கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியையும் சேர்த்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார்.

மம்தா பானர்ஜியுடன் 37 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 35 பேரும் காங்கிரஸ் கட்சியைச்  சேர்ந்த 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். மம்தாவையும் சேர்த்து மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆகும்.

 திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச்  சேர்ந்த 31 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். தனது வழக்கமான வெள்ளை நிற சேலையுடன் கழுத்தில் மூவர்ண ஸ்கார்ப் அணிந்து  காட்சி அளித்த 56 வயதான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தின் 11-வது முதல்வர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago