முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மஞ்சளாறு அணை இன்று திறப்பு: முதல்வர் உத்தரவு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.27 - தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடி பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 5,259  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  தேனி மாவட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து  எனக்கு  கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று,  தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு  முதல்போக சாகுபடி பாசனத்திற்காக      27.12.2013 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சுமார்  5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்