முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவாலய இடப்பிரச்சினை: கூட்டத்தில் தி.மு.க. வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்பு 10 சதவீத திறந்தவெளி இடம்  கடந்த ஆட்சியின்போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறப்பு சலுகைகள் மூலம் அந்த இடத்தை அவர்களே வைத்திருக்கிறார்கள். இதுவரை எந்தவிதமான தானப்பத்திரமும் தரவில்லை என்று   மேயர் சைதை துரைசாம கூறியதையடுத்து தி,மு.க.உறுப்பினர்கள் அமளியில் <ஈடுபட்டு பின் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது அ.தி.மு.க. கவுன்சிலர் சாந்தி, ''சென்னையில் உள்ள திறந்தவெளி நிலங்கள் எவ்வளவு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது'' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:_

''கடந்த 2006 முதல் 2011 வரை 57 திறந்தவெளி நிலங்கள் தானப்பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது என்றார்.

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் சின்னையன் என்ற ஆறுமுகம் பேசும்போது, ''தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்பு 10 சதவீத திறந்தவெளி இடம் மாநகராட்சிக்கு ஒப்படைக்காமல் அனுபவித்து வருகிறார்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?'' என்றார்.

மேயர்:_ அறிவாலயத்தின் முன்பு உள்ள திறந்தவெளி இடம் கடந்த ஆட்சியின்போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறப்பு சலுகைகள் மூலம் அந்த இடத்தை அவர்களே வைத்திருக்கிறார்கள். இதுவரை எந்தவிதமான தானப்பத்திரமும் தரவில்லை.

10 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் கட்டிடங்கள் கட்டும் போது 10 சதவீதம் இடம் திறந்தவெளி நிலமாக மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அதை அவர்கள் செய்யவில்லை என்றார்.

உடனே தி.மு.க. கவுன்சிலர்கள் சுபாஷ் சந்திர போஸ், நீலகண்டன், தேவ ஜவகர், கே.பி.பி.சங்கர் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூச்சல்_குழப்பத்துக்கு இடையே மேயர் சைதை துரைசாமி தொடர்ந்து பேசினார்.

அப்போது ''நான் சொல்வது தவறு என்றால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தவறாக இருந்தால் அதற்கான ஆவணங்களை கொண்டு வாருங்கள். அறிவாலய இடம் தொடர்பாக பலமுறை ஆய்வு செய்துதான் இந்த உண்மையை சபையில் சொல்கிறேன்.சிலநேரம் உண்மைகள் கசக்கத்தான் செய்யும். இவ்வளவு ஆவேசப்படும் நீங்கள் சூடு சொரணை இருந்தால் திருப்பி கொடுத்து விட வேண்டியதுதானே என்றார்.

உடனே கடும் ஆவேசம் அடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டு விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் தி.மு.க. கவுன்சிலர்கள் நிருபர்களிடம் 

'' இதே இடம் தொடர்பாக இந்த மன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி எதையும் சந்திக்க தி.மு.க. தயாராகவே இருக்கிறது  என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்