முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவொற்றியூரில் சமூககூடம் ஆக்கிரமிப்பா? மேயர் பதில்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - சென்னை திருவொற்றியூரில் சமூக நலக்கூடம் ஆக்கிரமிப்பு குறித்து மேயர் சைதை. துரைசாமி பதில் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:_

ஒரு நாளிதழிளில் தில்லு முல்லு என்ற தலைப்பின் கீழ் வந்த  சமூக நலக்கூடத்தை தன் பெயருக்கு மாற்ற மாமன்ற உறுப்பினர். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் அம்பலம் என்ற செய்தி வெளியிட்டது தொடர்பாக மேயர் சைதை துரைசாமி நேற்று கூடிய மாநகராட்சி மன்ற கூட்டத்தில் விளக்கம் அளித்தார். 

மாமன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:_.

சென்னை மாநகராட்சி, மண்டல_1, வார்டு_2_க்கு உட்பட்ட கமலம்மாள் நகரில் சர்வே எண்.113/1_ல் 0.22 சென்ட் நிலம், திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலக பத்திர பதிவு எண்.4138/1986 எண்ணாக பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் செல்வம் என்பவரால் கிரையம் பெற்று அனுபவித்து வரும் நிலமாகும். இந்த நிலத்தில் ஒரு பகுதியை (சுமார் 600 சதுர அடி) அப்பகுதி மக்களின் நலனுக்காக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு, அப்போதைய திருவொற்றியூர் நகராட்சி ஆணையர் 2003_ம் ஆண்டு பதிவு செய்யப்படாத ஒரு கடிதம் மூலம் செல்வம் என்பவர் எழுதிக் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் அந்த இடத்தில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு, அப்போதைய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 2003_2004_ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள் ந.க.எண்.4755/03/அ5 நாள் 09.07.2004_ன் படி ரூ.3.25 இலட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

நகராட்சி ஆணையரின் பதிவு செய்யப்படாத கடிதத்தை வைத்து நகராட்சி மூலம் சமுதாய நலக்கூடம் கட்ட இயலாது. எனவே மேற்படி 600 சதுர அடி நிலத்தை நகராட்சி ஆணையர் பெயரில் தானப்பத்திரம் பதிவு செய்து தந்தால் மட்டுமே பணி துவங்க இயலும் என நிலத்தின் உரிமையாளர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் நிலத்தின் சொந்தக்காரர் தானப்பத்திரம் மூலம் நகராட்சி ஆணையருக்கு நிலம் வழங்கவில்லை. இதனால் சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்தி சமுதாய நலக்கூடம் கட்ட இயலாமல் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் நகராட்சி ஆணையரின் நகரமன்ற தீர்மான எண்.93 நாள் 27.05.2005 பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சித்தலைவவ், திருவள்ளூர் கடிதம் ந.க. 4755/2003/அ5 நாள் 25.06.2005_ன் படிசமுதாய நலக்கூடம் கட்ட வழங்கப்பட்ட நிர்வாக அனுமதி செயல்முறையை ரத்து செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட ரூ.3.25 இலட்சத்தை வங்கி வரைவு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு திருப்பி அனுப்பப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதன் பின்னர் செல்வம் என்பவர் மேற்படி இடத்தில் அவரே தனது சொந்த செலவில், அவருக்கு சொந்தமாக ஒரு கட்டிடம் கட்டியுள்ளார். மேற்படி கட்டிடம் நகராட்சியின் பணத்தையோ அல்லது மாநகராட்சியின் பணத்தைக் கொண்டோ கட்டப்படவில்லை. எனவே அது மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்டவாறு மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்