முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி நிலுவைகளை துரிதமாக வசூலிக்க அமைச்சர் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - வரி நிலுவைகளை துரிதமாக வசூலிக்கவும், வரிவழக்குகளை விரைவாக முடிக்கும்படியும், வணிகவரித்துறை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று காலை வணிகவரித்துறை இணை ஆணையர்களின் பணித்திறனாய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் முதன்மை செயலர் மற்றும் வணிகவரி ஆணையர்  க.இராஜாராமன் பங்கேற்றனர். 

இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

வணிகவரி துறை ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும்போது கூறியதாவது:_

இந்த நடப்பாண்டில் செயலாக்கப் பிரிவினரால் ரூ.100கோடி வசூல் செய்யபட்டது. சென்ற ஆண்டு ரூ.14 கோடி மட்டுமே வசூல் செய்யபட்டுள்ளது. தெருத்தணிக்கையின்போது 4492 போலி வணிகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தணிக்கையின்போது 1780 பதிவு பெறாத புதிய வணிகர்கள் கண்டறியப்பட்டுள்ளது. போதிய ஆவணங்கள் இல்லாத ஒப்படைப்பு விற்பனை மூலம் மொபைல் போன் மற்றும் சமையல் எண்ணெய் வணிகத்தில். ரூபாய் 36கோடி வரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளைப் பற்றி குறிப்பிடுகையில் வணிகர்கள் வலைத்தளம் வழியாக 17.84.347 சி படிவங்களும் அவர்களது வணிக இடத்திலிருந்தே வலைத்தளம் மூலம் 3.42.174 மாதாந்திர நமூனாக்கள் பெறப்பட்டு ரூ.2.919/08 கோடி வலைத்தளம் மூலம் வணிகர் இடத்திலிருந்தே வரி செலுத்தப்பட்டுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதாவின் சமூக நல திட்டங்களுக்கும். இம்மாநிலத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்கும் தேவையான நிதியில் வணிகவரி வருவாயின் வளர்ச்சி முக்கிய காரணியாக விளங்குவதால் வணிகவரித்துறை அலுவலர்கள் தமது பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரிவருவாயை பெருக்க முழு முயற்சி மேற்கொண்டு இவ்வருட குறியீட்டினை அடைய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.

இப்பணிகளுள் வணிகர்களின் மாதாந்திர நமூனாக்களை கூர்ந்தாய்வு செய்தல். நமுனா பெறுதல். பெறப்படாத நமுனாவின் மீதான  உரிய நடவடிக்கை. நிலுவையில் உள்ள மத்திய விற்பனை வரிச்சட்ட வரிவிதிப்பு மற்றும் நிலுவையில் உள்ள செயலாக்கப்பிரிவின் முன் மொழிவுகளை விரைந்து செயல்படுத்துதல் ஆகியவற்றில் அனைத்து வரிவிதிப்பு அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வெண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும். வரி ஏய்ப்பு செய்யும் வணிகர் மற்றும் வாகன சோதனையில் கண்டறியப்படும் வரி ஏய்ப்பு இனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

வணிகவரித்துறையின் இரு பிரிவுகளும் போலி வணிகம் செய்யும் வணிகர்கள் மீது ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கை எடுத்தும் தவறான உள்ளீட்டு வரியினால் பயனடைந்த வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் அரசு வருவாயினை பாதுகாக்க வேண்டும். 

மேலும். எதிர்மறை வளர்ச்சி மற்றும் குறைவான வளர்ச்சி அறியப்படும் வணிக இனங்களிலும். அதிக உள்ளீட்டு வரியினை கோரியுள்ள மற்றும் முன்கோணர்ந்த இனங்களிலும் கூர்ந்தாய்வு செய்து காரணங்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். வணிகவரி கோட்ட அளவில் இணை ஆணையர்கள். துணை ஆணையர்களும் வரி நிலுவைகளை வசூலிக்கவும் மாதாந்திர நமுனாக்களை விடுதலின்றி வசூலிக்கவும். வரிவழக்குகளில் துரித நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையிலுள்ள வரிவருவாயை வசூலிக்கவும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவாய் இலக்கினை அடைய வேண்டும். 

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார் என்று செய்திக்குறிப்பு கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்