முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்ப மனு

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட திரண்டு வந்து அ.தி.மு.க.வினர் விருப்பமனு கொடுத்தனர். 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 19_ம் தேதி விருப்பமனு கொடுக்க அமைச்சர்கள், அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா தங்கள் தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்த வண்ணம் இருந்தனர்.

விருப்ப மனு கொடுக்க நேற்று கடைசி நாள் என்பதால் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட நடிகர் ராமராஜன் விருப்பமனு கொடுத்தார்.

கரூர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வி.வி.செந்தில்நாதன் விருப்பமனு அளித்தார். மேலும் கரூர் தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்க விருப்பமனு கொடுத்தார். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட அத்திவாக்கம் ரமேஷ், அரக்கோணம் தொகுதியில் போட்டிட கஜேந்திரன், தென்காசி தொகுதிக்கு சாத்தையா, தர்மபுரி தொகுதிக்கு டாக்டர் ஆர்.அசோகன், பூக்கடை ரவி, தென்சென்னை தொதிக்கு வி.என்.ரவி சார்பில் இளைஞர் பாசறை செயலாளர் விஜயபாஸ்கர், இணைச்செயலாளர் எஸ்.பி.செந்தில், வடசென்னை, மத்திய சென்னை தொகுதிக்கு டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆகியோர் விருப்ப மனு அளித்தனர்.

உதகை தொகுதிக்கு கிரீன்டெக் மகேஷ்குமார் விருப்பமனு வழங்கினார். அவருடன் ஊட்டி நகர அவைத்தலைவர் என்.வி.குணசேகரன் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்