முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் பட்டியலை திரும்பபெறப்படாது - இந்தியா

சனிக்கிழமை, 21 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.21 - பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலை திரும்பப்பெறப்படமாட்டாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால் அந்த பட்டியல் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள் தப்பியோடிவிடுகின்றனர். அப்படி தப்பியோடி வரும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் விருந்து கொடுத்து வரவேற்கிறது. தப்பியோடி முக்கிய தீவிரவாதிகள் 50 பேர் பெயர்கள் அடங்கிய பட்டியலை பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி அவர்களை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. 

இந்தநிலையில் அந்த 50 பேர் பட்டியலில் வாகுல் கான் உள்பட 2 தீவிரவாதிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. புலனாய்வு ஏஜன்சிகளின் கவனக்குறைவால்தான் இந்த தவறு ஏற்பட்டுள்ளது. அதற்காக பாகிஸ்தானிடம் இருந்து அந்த பட்டியலை திரும்பப்பெறப்படமாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்துறை செயலாளர் யு.கே.பன்சால் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பட்டியலில் தவறு நடந்திருப்பதற்கு சில அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த பன்சால், இதற்கு யார் பொறுப்போ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது உள்நாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் விசாரணை நடத்தப்படும் என்றும் பன்சால் மேலும் கூறினார். இந்த மாதிரி தவறு எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பன்சால் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago