முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் இருந்து இந்தியர்களை வெளியேற்றத் திட்டம்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிப்.24 - லிபியாவில் தொடர்ந்து உள்நாட்டு கலவரம் நீடித்துவரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றி இந்தியாவிற்கு கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
எகிப்தில் நடந்த புரட்சிக்கு பிறகு லிபியா, ஏமன், போன்ற பல்வேறு அரபு நாடுகளிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்திய எகிப்திய அதிபர் முபாரக்கை அந்நாட்டு மக்கள் போராடி பதவியில் இருந்து நீக்கியதுபோல, 41 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவரும் அதிபர் கடாபியை பதவியில் இருந்து தூக்கி கடாசவும் லிபிய மக்கள்  முடிவெடுத்து விட்டார்கள். அதன்விளைவுதான் அங்கு தற்போது கடுமையான மக்கள் புரட்சி நடந்துவருகிறது. ஆரம்பத்தில் இதை ஒடுக்கிய ராணுவம் தற்போது மக்களுக்கு ஆதரவாக திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏமன் போன்ற நாடுகளிலும் இதேபோல ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் நடந்துவருகின்றன. லிபியாவில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் பத்திரமாக வெளியேற்றி கொண்டுவர திட்டமிடப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். பாராளுமன்ற லோக்சபையில் இதுகுறித்து தன்னிலை விளக்கமளித்த எஸ்.எம்.கிருஷ்ணா மேலும் கூறுகையில், லிபியா நிலவரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டார். அதேபோல் ஏமன், பஹ்ரைன் நிலவரமும் கவனிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அங்குள்ள நிலவரங்கள் குறித்து அமைச்சர்கள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள நமது தூதர்களுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன். அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக இருப்பதற்கும், நலமாக இருப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட வேண்டும் என்று தூதர்களிடம் வலியுறுத்தினேன் என்று கிருஷ்ணா சபையில் கூறினார். இந்தியர்களுக்கு 24 மணி நேரமும் உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago