முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரமான பந்து வீச்சே வெற்றிக்கு காரணம் - காம்பீர்

சனிக்கிழமை, 21 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 21 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 தொடரில் மும்பையில் நடைபெற்ற புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதற் கு தரமான பந்து வீச்சே முக்கிய காரணம் என்று கொல்கத்தா அணிக் கேப்டன் கெளதம் காம்பீர் பாராட்டு தெரிவித்தார்.

புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்ற பிறகு, மும்பையில் நிருபர்களைச் சந்தித்த கேப்டன் காம் பீர் இந்தப் போட்டி குறித்து அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறி யிருக்கிறார். 

ஐ.பி.எல். டி - 20 தொடரில் மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் அரங்கத்தில் 65 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் யுவ ராஜ் சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும், கேப்டன் கா ம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோ தின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா ரைடர்ஸ அணி பீல்டிங்கை தேர்வுசெய்தது. புனே வாரியர்ஸ் அணி தரப்பில், ஜெஸ்சே ரைடர் மற்றும் பாண்டே இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணி கொல்கத்தாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 118 ரன்னில் சுருண்டது. அந்த அணி வீரர்கள் யாரும் கால் சதத்தை தாண்டவில்லை. 

அந்த அணி சார்பில், கேப்டன் யுவராஜ் சிங் 24 ரன்னையும், கங்குலி மற்றும் ரானா இருவரும் தலா 18 ரன்னையும் எடுத்தனர். பாலாஜி, ஹசன் மற்றும் யூசுப் பதான் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

பின்பு விளையாடிய கொல்கத்தா அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப் பிற்கு 119 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் காம்பீர் 54 ரன்னையு ம், யூசுப் பதான் 29 ரன்னையும், எம்.கே. திவாரி 24 ரன்னையும் எடுத் தனர்.   

புனே அணிக்கு எதிராக பாட்டீல் அரங்கத்தில் நடந்த இந்த லீக்கில் ஆடுகளம் முக்கிய பங்கு வகிக்கவில்லை. அந்த ஆடுகளத்தின் விக்கெ ட்டைவிட தரமான பந்து வீச்சே வெற்றியைப் பெற்றுத் தந்தது என்றா ர் காம்பீர். 

மேலும், ஒரு அணி 120 அல்லது 130 ரன்னுக்குள் ஆட்டம் இழந்து விட்டால் பொதுவாக ஒவ்வொருவரும் விக்கெட் குறித்தே பேசுவார்கள். இந்த ஆட்டத்தில் விக்கெட்டைவிட பந்து வீச்சே வெற்றிக்கு முக்கிய காரணமாகும் என்றும் கெளதம் தெரிவித்தார். 

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினார்கள். இதில் அவர்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார்கள். இங்கு விக்கெட் குறித்து கூச்ச லும், குழப்பமும் இருந்தது. இருந்த போதிலும் நாங்கள் எளிதான வெ ற்றியைப் பெற்றோம். எதிரணியால் இங்கு எளிதாக ரன்னை எடுக்க முடியவில்லை. எனவே பெளலர்களுக்கு எனது பாராட்டுகள் என்றும் காம்பீர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்