முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் 1,982 கிலோ எடை கொண்ட ஜி சாட்_14 என்ற செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி டி_5 ராக்கெட் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 19_ந்தேதி விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.

160 அடி உயரமும் 414 டன் எடையும் கொண்ட அந்த ராக்கெட்டில் முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளில் <டுபட்ட கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2_வது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று திரவ எரிபொருள் கசிந்தது. 

இதனால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது நிறுத்தப்பட்டது.

திரவ எரிபொருள் கசிவுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு ராக்கெட்டை மீண்டும் அனுப்பும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார். அதன்படி திரவ எரிபொருள் கசிவுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அது சரி செய்யப்பட்டுவிட்டது. (ஜனவரி 5_ந்தேத) நாளை மாலை 4.18 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்று அறிவித்தார். 

அதன்படி ராக்கெட் 5_ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி_5 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அந்த ராக்கெட்டில் 3 நிலைகளில் எரிபொருள் இருக்கும். முதல் நிலையில் திட எரிபொருளும், 2_வதாக திரவ எரிபொருளும், இறுதி நிலையில் கிரையோஜெனிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான இறுதிக் கட்ட ஆயத்த பணிகள் எனப்படும் 29 மணி நேர கவுண்ட்டவுன் இன்று  காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. வரிசையில் 8_வது ராக்கெட் ஆகும். இந்தவகை இதுவரை 7 முறை விண்ணில் செலுத்தப்பட்டதில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. 3 முறை தோல்வி அடைந்துள்ளது. 

இந்த முறை ஜி.எஸ்.எல்.வி. டி_5 ராக்கெட்டை வெற்றிகரமாக அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்