முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா தம்பியிடம் அமுலாக்க இயக்குனரகம் விசாரணை

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.24 - மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாளிடம் அமுலாக்க இயக்குனரக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

புதுடெல்லியில் உள்ள அமுலாக்க இயக்குனரக அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் கலியபெருமாளிடம் விசாரணை நடைபெற்றது. 2 ஜி. அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும் ஏற்கனவே இவரிடம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமுலாக்க இயக்குனரகமும், சி.பி.ஐ.யும் இணைந்து அவரது அலுவலகங்களிலும் கடந்த ஆண்டு இறுதியில் சோதனை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்