முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிக்காக கோவிலில் பூஜை நடத்திய பள்ளி தோழர்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், மே . 22 - ரஜினி உடல் நலம் குணமடைவதற்காக வேண்டி அவரது பள்ளி தோ ழர் கோவிலில் விசேஷ பூஜை நடத்தினார். அவரும் தற்போது கோவி ல் பூசாரியாக இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை போரூ ர் ராமச்சந்திரா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர து உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டாக் டர்கள் அறிவித்தனர். 

விரைவில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருப்பதாக கூறியு ள்ளனர். ரஜினி விரைவில் குணமடைய வேண்டி தமிழகத்தின் பல்வே று இடங்களில் அவரது ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை நடத்தி வரு கிறார்கள். 

இதற்கிடையே ரஜினியின் பள்ளி தோழரும், கோவில் பூசாரியுமான ஆகமாச்சாரியா நேற்று முன் தினம் கோவிலில் விசேஷ பூஜை நடத்தி னார். அவரது முழுப் பெயர் ஆகமாச்சாரியா சோமசுந்தர தீட்சித். 

இவரும் ரஜினிகாந்தும், பெங்களூரில் உள்ள கவிபுரத்தில் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். கவிபுரம் தொடக்கப் பள்ளியில் ரஜினியும், இவரும் ஒன்றாம் வகுப்பு முதல் 7 -ம் வகுப்பு வரை சேர்ந்து படித்தார் கள். 

தற்போது ஆகமாச்சாரியா கவிபுரம் கோவிலுக்கு உட்பட்ட கங்காதர கோவிலில் தலைமை பூசாரியாக இருக்கிறார். ரஜினியுடன் பழகிய நாட்கள் குறித்து அவர் கூறியதாவது - 

நானும் ரஜினியும், 7 -ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். பள்ளியி ல் நடக்கும் எல்லா நாடகங்களிலும் அவர் நடிப்பார். அதுமட்டுமல் லாமல், ரஜினி சிறந்த கபடி வீரர். 

நாங்கள் கபடி அல்லது கோகோ விளையாட்டு விளையாடுவோம். ரஜினி சிறந்த மாணவராக இருந்தார். அவருக்கு கபடி என்றால் மிகவு ம் பிடிக்கும். இங்குள்ள கோவிலில் என் தந்தைக்கு பிறகு நான் பூசாரி யாக இருக்கிறேன். 

சிறுவயதில் நானும், ரஜினியும் தினசரி கோவிலுக்கு வந்து சாமி கும் பிட்டு விட்டு பிரசாதம் வாங்கி சாப்பிடுவோம். ரஜினி தன் இள வய தில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவர். 

இப்போதும், பெங்களூர் வந்தால், என்னை சந்திக்காமல் போக மாட் டார். நள்ளிரவில் தான் என்னை கூப்பிடுவார். யாருக்கும் தெரியாமல் நாங்கள் இருவரும் நீண்ட நேரம் பேசுவோம். அவர் விரைவில் குணம டைய வேண்டும். இவ்வாறு ஆகமாச்சாரியா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்