முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியருக்கு மரண தண்டனை: துபாய் நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

துபாய், ஜன.17 - துபாயில் தன்னுடன் வசித்து வந்த சக இந்திய நண்பரை கொன்று அவரது உடலை பெட்டிக்குள் வைத்து வெளிய வீசிய இந்திய வாலிபருக்கு துபாய் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. துபாயில் வசிக்கும் இந்திய வாலிபர் ஒருவருக்கு அவரது நண்பர் ரூ.1லட்சத்து 41 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். அதை 3 தவனைகளில் திரும்பி தர வேண்டும் என்று இருவரும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி இருவரும் துபாயில் உள்ள மற்றொரு இந்திய வாலிபரின் வீட்டில் சந்தித்து கடன் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த வாலிபர் கடன் கொடுத்த நண்பரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். பின்னர் அவரது உடலை ஒரு பெட்டியில் வைத்து யாரும் கவனிக்காத குப்பைகள் கொட்டும் இடத்தில் வீசிவிட்டார். தகவல் அறிந்த போலீஸார் இந்திய வாலிபரை கைது செய்து உடல் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டியை கைப்பற்றினர். இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த கைரேகைகள் மற்றும் கண்கானிப்பு கேமரா ஆகியவற்றின் உதவியால் மேலும் 3 பேரை கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். கொலை செய்த வாலிபர் இந்தியா தப்பி செல்வதற்கு முன்பாக கடந்த மே 23-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சக நண்பரை கொன்ற இந்திய வாலிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்