முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க பல்வேறு திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி,மே.22 - தமிழக அமைச்சரவையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் என்.ஆர்.சிவபதி பதவி ஏற்ற பின்பு முதல்முறையாக நேற்று காலை திருச்சி வந்தார். அதைத்தொடர்ந்து திருச்சி மன்னார்புரம் அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் என்.ஆர்.சிவபதியை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் மகேசன் காசிராஜன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. மவுரியா, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நிஜாமுதீன், திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஜெயபாண்டியன் மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அமைச்சருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

இதைத்தொடர்ந்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக விளையாட்டுத்துறையை பொறுத்தவரை திறமையான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டிகளில் பங்கேற்பதற்கும், அவர்கள் வெற்றி பெறுவதற்கும் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறார். குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறார். குறிப்பாக நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களையும் அதிலும் தகுதி வாய்ந்த வீரர்களை தேர்ந்தெடுப்பதுதான் முதல்வரின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. 

கடந்த ஆட்சி காலத்தில் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. குறிப்பாக விளையாட்டு துறையில் அரசியல் குறுக்கீடும், பணமும் இருந்ததால் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் உருவாகவில்லை. ஆனால் இப்போது அரசியல் குறுக்கீடு இல்லாமல் திறமைக்கு முன்னுரிமை கொடுத்து தகுதி படைத்தவர்களைதான் தேர்ந்தொடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேட்டியின்போது எம்.எல்.ஏக்கள் டி.பி.பூனாட்சி, சந்திரசேகரன், இந்திராகாந்தி, தேமுதிக திருவெறும்பூர் எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக அமைச்சர் என்.ஆர்.சிவபதிக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன், திருச்சி எம்.பி.குமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள். பரஞ்சோதி, ரத்தினவேல், பிரின்ஸ் தங்கவேல், பேரவை செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் நெடுமாறன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் பேரூர் கண்ணதாசன், முன்னாள் எம்.எல்.ஏ.சின்னசாமி, தொட்டியம் ஒன்றிய துணைத்தலைவர் என்.ஆர்.சேதுபதி, ஒன்றிய செயலாளர்கள், ஜெயக்குமார், சூப்பர் நடேசன், பால்மணி, முசிறி பேரூராட்சி துணைத்தலைவர் பேங்க் ஆர்.ராமசாமி உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

முன்னதாக அமைச்சர் சிவபதிக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்