முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டுபாளையம் மலை ரயிலை பாதுகாக்க வைகோ வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.22 - உலகபாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள மேட்டுபாளையம்- ஊட்டி மலை ரயிலை நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாக்க வேண்டுமென்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இமயமலையைவிடப் பழமையான தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி

மலைத் தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான மலைகளின் அரசி என்று பெருமையோடு அழைக்கப்படும் nullநீலகிரி மாவட்டம், தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கூடல் பகுதியாகும்.

இம்மலை மாவட்டத்தில், தோடர், படுகர், குரும்பர் எனப்

பழங்குடியினர்களான ஆதிவாசிகள், பல்வேறு இன, மொழி,

கலாச்சாரங்களைக் கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இம்மலை மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,240 மீட்டர் (7216 அடி) உயரத்தில் இருக்கின்றது. எனவே, கோடை காலங்களில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் போன்ற இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கி விடுகின்றனர்.

இயற்கை அன்னை மரகதக் கம்பளம் விரித்ததைப் போன்று பச்சைப் பசேல் எனத் தோன்றும் ரம்மியமான காட்சியைப் பார்த்து யாரும் பரவசப்படாமல் இருக்க முடியாது. உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாக ​ பல்லுயிர் பெருக்கம் கொண்ட ​ பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக nullநீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருக்கின்றது. அவற்றில் அனைவரின் கவனத்தை கவர்ந்த ஒன்று மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை இரயில். முதற்கட்டமாக 1899 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உலகின் மிகவும் இதமான தட்பவெப்ப நிலை நிலவும் நகரங்களில் ஒன்றான குன்னூர் வரை இயக்கப்பட்டது; இரண்டாம் கட்டமாக 1908 ஆம் ஆண்டு குன்னூரில் இருந்து ஊட்டி வரை nullநீட்டிக்கப்பட்டது.

ஆக்ராவின் தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு போன்று நூறாண்டு கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இம்மலை ரயில், குகை பாதை, பாலங்கள், அருவிகளைக் கடந்து வான வீதியில் ஊர்ந்து செல்லும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி என்பது மயிர்க்கூச்செரியும். வாழ்வில் எக்காலத்திலும் மறக்க முடியாத உன்னத அனுபவம் பொறியியல் துறையின் அதிசயம் தான். மலை இரயிலின் நீnullராவி எஞ்ஜின்கள், இயற்கை அழகை கண்டு இரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரயில் பெட்டிகள், பழமை மாறாத இரயில் நிலையங்கள் என்று பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட மலை இரயிலை ஆஸ்திரேலிய நாட்டின் பேராசிரியர் ராபர்ட் லி என்பவரின் தலைமையிலான குழு உலக பாரம்பரியங்களை தேர்வு செய்யும் யுனெஸ்கோ அமைப்பு 2005 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஊட்டி மலை இரயில் சமீபகாலமாக அவ்வப்போது பழுதுபட்டு பயணத்தின் பாதி வழியிலேயே நின்றுவிடுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.

எனவே, மத்திய அரசு இம்மலை இரயிலுக்குத் தனிக் கவனம் செலுத்தி சுற்றுலா முக்கியத்துவம் கருதி பழமை மாறாமல் நமது பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கின்ற வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கிட ஆவண செய்திட வேண்டும். ஒன்றைப் புதிதாக உருவாக்குவது கடினம்.

நூறாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதைப் பாதுகாப்பது நமது

கடமை. பரந்துபட்ட இந்தியத் துணைக் கண்டத்தில் வடக்கே காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலான மிக நீnullண்ட இரயில் பாதையை நாள்தோறும் இலட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களது உயிருடன் விளையாடுவதைப் போன்று சமீப காலமாக அதிகரித்து வரும் இரயில் தண்டவாளங்கள் விரிசல், உடைப்பு போன்றவை தரமில்லாத பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படுகிறதோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது.

இரயில் பயணத்திற்கான முன்பதிவு செய்யும் இடங்களில் அந்தந்த மாநில மொழிகளில் விண்ணப்பத்தாள்கள் அச்சடித்து வழங்கப்பட வேண்டும்; அம்மாநில மொழி தெரிந்தவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய இரயில் பாதைப் பணிகளை விரைந்து நடைமுறைப்படுத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago