முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் போலியோ நோய் தாக்குதல் அதிகமாம்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன.19 - பாகிஸ்தானில் போலியோ தாக்குதல் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக சர்வதேச நாடுகளில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

ஆண்டுதோறும் வழங்கப்படும் சொட்டு மருந்தினால்  போலியோ நோய் இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் இன்னும் போலியோ நோய் தாக்குதல் உள்ளது.  இவற்றில் உலகிலேயே பாகிஸ்தானில் தான் அதிக அளவில் போலியோ நோய் தாக்குதல் உள்ளது. அதன்படி இந்த ஆண்டு 91 குழந்தைகள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கு முன்பு 58 பேர் மட்டுமே போலியோ தாக்குதலுக்கு ஆளாகி இருந்தனர். பாகிஸ்தானில் பல பகுதிகளில் போலியோ வைரஸ் கிருமிகள் முற்றிலும்  அழிக்கப்பட்டிருந்தன. 

ஆனால் பெஷாவரில் மட்டும் அவற்றை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை. அங்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மருத்துவ குழுவினர் மீது தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 30 போலியோ குழுவினர் மீது  தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளன. முஸ்லிம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க விடாமல் தடுக்கின்றனர். அதனால்தான் அங்கு போலியோ வைரஸ் கிருமிகளை அழிக்கமுடியவில்லை என உலக சுகாதார நிறுவன போலியோ தடுப்புப் பிரிவு தலைவர் எலியால்சாரி தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தானில் அனைத்து பகுதிகளிலும் இல்லை. பெஷாவர் பகுதியில் மட்டும் தான் அதிகம் உள்ளது. அதுவே போலியோ நோயை ஒழிப்பதில் இடையூறாக திகழ்கிறது என்றார்.                           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்