முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புழலிருந்து மேலும் 17 இலங்கை மீனவர்கள் விடுதலை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 20 - இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும், தமிழக சிறைகளில் வாடும் இலங்கை மீனவர்களையும் விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி இருதரப்பு மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

ராமேஸ்வரம், தூத்துக்குடி, சென்னை கடல் பகுதிகளில் ஊடுருவி மீன்பிடித்த 179 இலங்கை மீனவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் கைதானார்கள். இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை விடுதலை செய்ய முதல்_அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதன்படி, இலங்கை மீனவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 13_ந்தேதி அன்று 52 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் 2 நாட்கள் எழும்பூரில் உள்ள புத்த மடத்தில் தங்கி இருந்தனர்.

பின்னர், 15_ந் தேதி இந்திய கடற்படை கப்பல் மூலமாக அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் 61 இலங்கை மீனவர்கள் புழல் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இரவு 10 மணிக்கு மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்டார்கள். இந்த 79 பேரும் எழும்பூரில் உள்ள புத்த மடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று இரவு 78 பேரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் உள்ள 179 பேரில் இதுவரை 130 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள 49 பேரும் இன்னும் ஓரிரு தினங்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதே போல இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்களும் முதல்_அமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியின் காரணமாக கடந்த 13_ந் தேதியில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுவரை, 211 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களும், இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்