முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழியை சந்திக்க செல்கின்றேன் சோனியாவை சந்திக்க வாய்ப்பு இருக்காது- கருணாநிதி

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 23 - கனிமொழியை சந்திக்க செல்கின்றேன் என்றும ,டெல்லியில் சோனியாவை சந்திக்க வாய்ப்பு இருக்காது என்றும் கருணாநிதி கூறினார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கனிமொழி எம்.பி.யை பார்க்க தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று டெல்லி செல்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: கேள்வி:​ பிரதமர் டெல்லியில் நேற்று அளிக்கும் விருந்தில் தி.மு.க. சார்பில் யார் கலந்து கொள்கிறார்கள்? பதில்: நாடாளுமன்றத்தில் தி.மு.க. குழு தலைவராக டி.ஆர்.பாலு இருக்கிறார். அவர் பிரதமர் விருந்தில் கலந்து கொள்வார். கேள்வி:​ நீnullங்கள் (நாளை)இன்றைய தினம் டெல்லி செல்வதாக செய்தி வந்துள்ளதே? பதில்:​ திகார் சிறையில் இருக்கும் என் மகள் கனிமொழி, சரத்குமார், ராசா ஆகிய 3 பேரையும் பார்ப்பதற்காக (நாளை ) இன்று டெல்லி செல்கிறேன். கேள்வி:​ டெல்லி செல்லும் போது சோனியாகாந்தியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? பதில்:​ நாளைய (இன்று) தினம் வாய்ப்பு இருக்காது என்றே நினைக்கிறேன். கேள்வி:​ உங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தற்போது உறவு எப்படி இருக்கிறது? பதில்:​ nullநீங்கள் விரும்புவதைப் போல் அப்படி எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். மத்திய மந்திரி சபையில் தி.மு.க.வை சேர்ந்த 6 மந்திரிகள் உள்ளனர். இவர்கள் யாரும் மன்மோகன்சிங் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. டெல்லி சென்று இருந்த தி.மு.க. மந்திரிகளும், எம்.பி.க்களும் சென்னை திரும்பி விட்டனர். கனிமொழி கைது செய்யப்பட்டதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 3-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடும் மனநிலையில் இல்லாததால் தி.மு.க. இந்த முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்