முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் பதவி ஏற்றார்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 23 - ஜெயலலிதா முன்னிலையில் சபாநாயகர் செ.கு.தமிழரசன் பதவியேற்றார். கவர்னர் சிர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் பதவியேற்பு விழா கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிக்காக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வந்தார். அவரை முதலமைச்சர் ஜெயலலிதா nullங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  ஜெயலலிதாவுக்கு செ.கு. தமிழரசன் nullங்கொத்து கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து பதவியேற்பு விழா தொடங்கியது.
முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், கவர்னர் பர்னாலா தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசனுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட செ.கு.தமிழரசனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா nullங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.டி.பச்சைமால், சி.வி.சண்முகம், செந்தமிழன், பி.தங்கமணி, சண்முகவேலு, எஸ்.வி.வேலுமணி, ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ, செந்தில் பாலாஜி, சின்னையா, கருப்பசாமி, கோகுல இந்திரா, செல்வி ராமஜெயம், எஸ்.பி.சண்முகநாதன், மரியம் பிச்சை, ரமணா உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ஷீலாராணி சுங்கத், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.  
பின்னர் சபாநாயகர் செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:​
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளில் முதல் சீட் எனக்கு தந்தவர் ஜெயலலிதா. அவருக்கு எனது நன்றி. வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க் களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கும் பொறுப்பை என்னைப் போன்ற எளிய கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கி இருப்பது ஒடுக்கப்பட்ட, மக்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், அன்பையும் காட்டுகிறது. அவர் என்றுமே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர்.  கடந்த 91-ம் ஆண்டு இதேபோல் ஏ.எஸ்.பொன்னம்மாளுக்கும், 2001-ம் ஆண்டு லத்தீப்புக்கும், சபாநாயகர் பதவி வழங்கி பெருமைபடுத்தினார். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாகத்தான் இன்று வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளார். தேசிய அளவிலும் அவர் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்