முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா மனைவி மிஷலின் 50-வது பிறந்த நாள் பார்ட்டி

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜன. 22 - அமெரிக்க அதிபர் ஓபாமாவின் மனைவி மிஷல், கடந்த சனிக்கிழமை தனது 50_வது பிறந்த நாளை கொண்டாடினார். சனிக் கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் பார்ட்டி நடந்தது. 

அதிபர் ஓபாமாவின் மனைவி மிஷல் தனது 50_வது பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

சனிக் கிழமை பிறந்த நாள் பார்ட்டி நடந்தது. இதில் பங்கேற்பவர்கள் முன் கூட்டியே சாப்பிட்டு விட்டு வர வேண்டும். நல்ல ஷூ அணிந்து வர வேண்டும். 

பிறந்த நாள் பார்ட்டியில் டோகி வகை ஹிப்ஹாப் நடனம் இடம் பெறுவதால் அதிக பயிற்சி அவசியம். எனவே பார்ட்டியில் நடனமாடுவது எப்படி என்பதற்கு ஒத்திகை பார்த்து விட்டு வர வேண்டும் என்று இ மெயில் அனுப்பப்பட்டது. அதனால் பார்ட்டியில் உணவுக்கு ஏற்பாடு செய்யவில்லை. 

மிஷல் பிறந்த நாள் பார்ட்டியில் அதிபர் ஒபாமா மகள்கள் மலியா, சஷா மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்றனர். 

பிரபல பாப் பாடகர்கள் பெயான்ஸ், ஸ்டீவ் வொண்டர், அதிபர் குடும்பத்துக்கு மிக நெருக்கமான நண்பர்கள், அதிகாரிகள், விளையாட்டு பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டும் கலந்து கொண்டனர். 

ஞாயிற்றுக் கிழமை விடிய விடிய நடைபெற்ற இந்த பார்ட்டியில் ஒபாமா மற்றும் மகள்கள் உள்பட பங்கேற்றவர்கள் அனைவரும் மிக சிறப்பாக நடனமாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

பார்ட்டியில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்