முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமசீர் கல்விமுறை பாடத்திட்டம் ரத்து இந்திய தேசிய லீக் முதல்வருக்கு நன்றி

திங்கட்கிழமை, 23 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மே.- 23 - தமிழகத்தில் சமசீர் கல்வி முறையை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு இந்திய தேசிய லீக் நன்றி தெரிவித்துள்ளது. நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.அமோக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமர்ந்து உள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் பல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளார்.
அந்த வகையில் சமச்சீர் கல்வி முறையை தி.மு.க அரசு கொண்டு வந்து சிறுபான்மை மொழிகளை குழிதோண்டி புதைத்தது. அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள முஸ்லீம்களில் 55 சதவீதம் உருது முஸ்லீம்கள் வாழ்த்துகின்றனர். தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையில் பாதிக்கப்பட்ட மொழிகளில் உருது மொழி முக்கியமானது. அ.தி.மு.க. பதவி ஏற்றவுடன் சமச்சீர் கல்வி முறையை ஒழித்து முன்பு உள்ளது போலவே பாடத்திட்டங்கள் தொடரும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். இது உருது முஸ்லீம்கள் உட்பட சிறுபான்மை மொழியினருக்கு நல்ல செய்தியாக அமைந்து உள்ளது. தமிழக முதல்வருக்கு இந்திய தேசிய லீக் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் அப்துல்ரஹீம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்