முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியில் இருந்து வார்னே ஓய்வு பெற்றார்

திங்கட்கிழமை, 23 மே 2011      விளையாட்டு
Image Unavailable

மும்பை, மே. - 22 - ஆஸ்திரேலிய அணியின்  முன்னாள் வீரரான ஷேன் வார்னே இந்தியன் பிரீமியர்  லீக் 20 -க்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு  பெற்றார். இது பற்றிய விபரம் வருமாறு -  டெஸ்ட்  போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை  படை த்தவர் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன்  வார்னே. அவர் டெஸ்டி ல் 700 விக்கெட்டுகளை  கைப்பற்றினார். தவிர, ஒரு நாள் போட்டிகளி ல் 293  விக்கெட் எடுத்தார்.
ஆஸ்திரேலிய வீரரான ஷேன்  வார்னேவின் சாதனையை இலங்கை அணியின் ஆப்  ஸ்பின்னரான முரளீதரன் முறியடித்தார். அவர் டெஸ்ட்  போட்டியில் 800 விக்கெட் வீழ்த்தி புதிய உலக  சாதனை படைத்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து  ஓய்வு பெற்ற வார்னே ஐ.பி.எல். போட்டி அறிமுகம்  ஆனதிலிருந்து ஆடினார். அவர் ராஜஸ்தான் ராய ல்ஸ்  அணியின் கேப்டனாக பணியாற்றினார்.
ஐ.பி.எல்.  தொடரின் முதல் ஆண்டு போட்டியிலேலேய அவர் ராஜஸ்  தான் ராயல்ஸ் அணிக்கு கோப்பையை பெற்றுத்  தந்தார். 2 - வது, 3 - வது ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான்  அணி அரை இறுதியை எட்டவி ல்லை.
4 -வது  ஐ.பி.எல்.தொடரில் வார்னேவை அந்த அணி நிர்வாகம்  தக்க வைத்துக் கொண்டது. இந்த ஐ.பி.எல். தொடரோடு  அவர் ஓய்வு பெ றுவதாக ஏற்கனவே அறிவித்து  இருந்தார்.
வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணியை  தோற்கடித்தது. இந்தப் போட்டி முடிவடைந்ததும்  கேப்டன் வார்னே ஓய்வு பெற்றார்.
பின்பு  நிருபர்களைச் சந்தித்த வார்னே இது குறித்து  தெரிவித்ததாவது - இது எனது கடைசி ஆட்டம் என்று  சொல்ல மாட்டேன். மீண்டும் எனது ஆட்டம் தொடரும்.  பயிற்சியாளராக இருப்பேன். முழு நேர பயிற்  சியாளராக இருக்க முடியாது.
ஐ.பி.எல். போட்டியில்  4 ஆண்டுகள் விளையாடியது மகிழ்ச்சி அளிக் கிறது.  இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் அதிக  வெற்றி பெற்ற 2 - வது அணி ராஜஸ்தான் என்பதில்  பெருமை அடைகிறேன். 2008 -ம் ஆண்டு போட்டி எனக்கு  மறக்க இயலாதது. இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்