முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா எம்.எல்.ஏவாக பதவியேற்பு அமைச்சர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். 24 - தமிழகத்தின் 14 வதுசட்டசபையில் எம்.எல்.ஏவாக ஜெயலலிதா பதவியேற்றார். பின்னர் அமைச்சர் மரியம் பிச்சை மறைவுக்கு இரங்கல்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு:​
தமிழகத்தின் 14-வது சட்டமன்றத்தின் புதிய கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டியில் நேற்று மதியம் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா 12.24 மணிக்கு சபைக்கு வந்தார். அதனை தொடர்ந்து 12.30 மணிக்கு தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் சபைக்கு வந்தார். அப்போது அவர் திருக்குறலை படித்தார். பின்னர்  மறைந்த அமைச்சர் மரியம் பிச்சைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் இரங்கல் குறிப்பு வாசித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி மேற்கு தொகுதியிலிருந்து 14-வது சட்டசபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மரியம் பிச்சை கடந்த 16-ந்தேதி சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் மரணமடைந்தார். அதற்கு இந்த சபை அதிர்ச்சியும், ஆற்றொண்ணா துயரமும் அடைகிறது. அவர்களது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் 2 மணி துளி எழுந்து நின்று அனுதாபம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா அவையிலிருந்த அனைத்து உறுப்பினர்கள் 2 மணி துளிகள் எழுந்து நின்று அனுதாபம் தெரிவித்தனர்.
பின்னர் அதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. 12.38 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா முதலாவது எம்.எல்.ஏவாக பதவியேற்றார். அவர் எடுத்து கொண்ட உறுதிமொழி வருமாறு:- சட்டமன்ற பேரவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாவாகிய நான் சட்டமுறைபடி நிறுவப்பெற்றுள்ள  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றுதியையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையான்மையின் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்று நான் மேற்கொள்ளயிருக்கும் கடமையை நேர்மையும் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் உறுதிமொழி ஏற்றார். பின்னர் பதவி ஏட்டில் அவர் கையெழுத்திட்டார். எம்.எல்.ஏவாக பதவியேற்ற சான்றிதழ்களை சபாநாயகரிடம் கொடுத்தார். ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, அகிரி கிருஷ்ணமூர்த்தி, சண்முகவேலு, செ.கருப்புசாமி, கோகுல இந்திரா, செல்வி ராமஜெயம், ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, செந்தில்பாலாஜி, ஜி.செந்தமிழன், பழனியப்பன், எஸ்.பி.சண்முகநாதன், பச்சையம்மாள் உள்ளிட்ட 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். பின்னர் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செளந்தரராஜன், ச.ம.க. தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தி.மு.க. உறுப்பினர் மு.க.ஸ்டாலின், ஏ.வ.வேலு, தங்கதென்னரசு உள்ளிட்ட 230 உறுப்பினர் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர் எஸ்.ஆர்.சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் கே.மனோகரன், தி.மு.க. தலைவர் கருணாநிதி, துரைமுருகன் ஆகியோர் நேற்று பதவியேற்றுக்கொள்ள வில்லை.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago