முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் மரியம்பிச்சை மறைவு: கவர்னர் மத்திய அமைச்சர் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, மே.- 24 - திருச்சி அருகே நேற்று காலை சாலை விபத்தில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சை மரணமடைந்தார். அவரது மறைவிற்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் சர்வகட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா:- சாலை விபத்தில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சை அகால மரமணமடைந்தார் என்ற செய்தி கேட்டு நான் பேரதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். ஆற்றல் மிக்கவர், முன்னுக்கு வந்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையை மரணம் பறித்து விட்டது. ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறவனை பிரார்த்திக்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்:-
மத்திய உள்துறை அமச்சர் ப.சிதம்பரம் மந்திரியின் மனைவி பாத்திமா கனிக்கு அனுப்பி உள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மரியம்பிச்சை, அகால மரணமடைந்தார் என்ற செய்த கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரோடு எனக்கு நேரடியாக பழக்கம் இல்லை என்றாலும், அவரைப் பற்றியும், அவருடைய கட்சி பணி பற்றியும் நான் அறிந்திருந்தேன். அவர் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சர் பதவியேற்று ஒரு வார காலத்திற்குள்ளேயே இதுபோன்று ஒரு துர்பாக்கியமான நிகழ்ச்சி நடத்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
தங்கள் வேதனையும், துயரமும் அளவிட முடியாதது என்பதை உணர்கிறேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த மரியம்பிச்சையின் ஆன்மா சாந்தி அடைய இறவனை பிரார்த்திக்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லாஹ்:-
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் இரங்கல் செய்தியில்
தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மற்றும் வக்ஃபு வாரிய அமைச்சரான மரியம் பிச்சை அவர்கள் வாகன விபத்தில் மரணமடைந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது.
அதிமுகவின் வீரத்தளபதிகளில் ஒருவராக விளங்கிய மரியம் பிச்சை அவர்கள் திருச்சியில் தலைவிரித்தாடிய ஊழல் மற்றும் அரசியல் அராஜகங்களைத் தகர்த்தெறிந்து மக்கள் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகிய நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
செயலாற்ற மிக்க மரியம் பிச்சையை இழந்து வாடும் அதிமுகவிற்கும், திருச்சி மேற்கு தெகுதி மக்களுக்கும், குடும்பத்தலைவரை இழந்து வாடும் மரியம் பிச்சை அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கெள்கிறேன்.
மூ.மு.க.சேதுராமன்:-
தமிழக சுற்றுச்சுழல் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற மரியம்பிச்சையின் அகால மரணம் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். கடந்த ஜந்தாண்டுகளாக அராஜக ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடிய மரியம் பிச்சையின் மறைவு திருச்சி மாநகர மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மரியம் பிச்சையை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் தமிழக முதல்வர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மலைக்கேட்டை நகரில் வலம் வந்தவர் ஜெயலலிதா இட்ட கட்டளையை நிறைவேற்றுவதில் திருச்சி மாநகரில் முன்னணியில் நின்றவர். தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும்...வெற்றி என்றாவது நிச்சயம் என்கிற இலக்கணத்துக்கு உதாரணமாக அண்மையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். விபத்து மூலம் மரியம்பிச்சையை பறிகொடுத்து இருக்கிறோம். ஒரு வழிப் பாதை என்கிற நோக்கத்தில் புறநகர் சாலைகளில் அதிவேகமாக வாகனம் இயக்குவது ஆபத்து.வாகனங்களை இயக்கும்போது கூடுதலாக ஒரு ஒட்டுநர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மரியம்பிச்சையின் மரணம் நமக்கு உணர்த்துகிறது.
மரியம் பிச்சையின் மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி பாத்திமாவுக்கும் மகன்களுக்கும் திருச்சி மேற்கு தொகுதியில் அவரை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கும், அ.இ.அ.தி.மு.க தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்