முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 5 அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே  24 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கம்பெனி அதிகாரிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த் பெகூரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, யுனிடெக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்த்ரா, அடாக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கெளதம் தோஷி, ஸ்வான் டெலிகாம் கூட்டு நிறுவனர் வினோத் கோயங்கா, அடாக் குழுமத்தின் தலைவர் சுரேந்திர பிபாரா, அந்த கம்பெனியின் மூத்த துணைத் தலைவர் ஹரிநாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சஞ்சய் சந்த்ரா,  கெளதம் தோஷி, வினோத் கோயங்கா, சுரேந்திர பிபாரா, ஹரிநாயர் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி அஜீத் பாரிகோஹி, இந்த மனுக்கள் மீதான உத்தரவை 23 ம் தேதிக்கு (நேற்றைக்கு) ஒத்திவைத்தார்.  அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி அஜீத் பாரிகோஹி, இந்த 5 பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். எனவே இவர்கள் 5 பேரும் தொடர்ந்து திஹார் சிறையிலேயே இருப்பார்கள். இவர்கள் கடந்த ஏப்ரல் 20 ம் தேதிமுதல் சிறையில் இருந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago