முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘ஆசியாவின் ஹிட்லர்’ ஷின்சோ அபே: வடகொரியா கருத்து

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

பியாங்யாங், பிப். 6 - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை ஆசியாவின் ஹிட்லர் என்று வடகொரியா வர்ணித்துள்ளது. பிராந்தியத்தில் சமநிலையை பேணுகிறோம் என்ற போர்வையில் தனது நாட்டின் ராணுவ பலத்தை ஷின்சோ அதிகரித்து வருவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வடகொரிய அரசு சார்பு பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி விவரம்:

“வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காரணம் காட்டி, தனது நாட்டு ராணுவத்தை விரிவுபடுத்துவதை நியாயப்படுத்தி வருகிறார் ஷின்சோ அபே. ஜப்பான் மீது முன்வைக்கப்படும் சர்வதேச அளவிலான விமர்சனங்களை, வேறு நாட்டின் (வடகொரியா) மீது திசை திருப்ப முயற்சிக்கிறார் ஷின்சோ அபே. பாசிஸ கொள்கையுடைய ஜெர்மனியின் ஹிட்லருக்கும், வடகொரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஷின்சோ அபேக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜப்பானின் அரசமைப்புச் சட்டம் அமைதிக் கொள்கை உடையதாக உருவாக்கப்பட்டது. அந்நாடு, தனது ராணுவத்தை தற்காப்புப் படை என்றே அழைத்து வருகிறது.

ஆனால், சமீப காலமாக வட கொரியா, சீனாவுடனான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஜப்பானின் கொள்கையில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசுகையில், “2020-ம் ஆண்டு ஜப்பான் அரசமைப்புச் சட்டத்தை காலத்துக்கு ஏற்ப மாற்ற முடிவு செய்துள்ளோம். இதுவரை தற்காப்புப் படையாக இருந்த ராணுவம், முழு அளவிலான தாக்குதல் திறன்மிக்கதாக மாற்றியமைக்கப்படும். பிராந்திய அளவில் சமநிலையை பேணுவதற்காக இந்த மாற்றம் அவசியமாகிறது” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago