முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்வங்க தேர்தல் தோல்வியால் இ.கம்யூ. தலைமையில் மாற்றம் ஏற்படும் : சீதாராம்யெச்சூரி

புதன்கிழமை, 25 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே. - 25 - மேற்குவங்க தேர்தல் தோல்வியால் இ.கம்யூனிஸ்டு தலைமையில் மாற்றம் ஏற்படும் என்று சீதாராம்யெச்சூரி கூறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் இ.கம்யூனிஸ்ட்டு கட்சி படுதோல்வி அடைந்தது. இத்தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஆட்சியைக் கைப்பற்றியது. 34 ஆண்டு கால கம்யூனிஸ்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும் கேரள மாநிலத்திலும் கம்யூனிஸ்டு கட்சி தோல்வி அடைந்தது. எனினும் மேற்குவங்க மாநிலத்தில் 34  ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கம்யூனிஸ்டுகள், சமீபத்தில் தேர்தல் தோல்வியால் நிலைகுலைந்தனர். இந்த தோல்வியின் காரணமாக, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தான் கட்சியின் உயர்மட்ட குழுவிலிருந்தும் மத்திய கமிட்டியில் இருந்தும் விலக விரும்புவதாக அறிவித்தார். தேர்தல் தோல்வி காரணமாக இ.கம்யூனிஸ்டு தலைமையில் மாற்றம் ஏற்படும் என்று உயர்மட்ட குழு உறுப்பினர் சீதாராம்யெச்சூரி கூறினார். சீதாராம்யெச்சூரி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அப்போது தலைமை மாற்றம் பற்றி கருத்து தெரிவித்தார். சீதாராம்யெச்சூரி கூறியதாவது; மத்திய கமிட்டி முதலில் செய்ய வேண்டியது என் தவறு நேர்ந்தது என்ற ஆத்ம சோதனையை ஆரம்பிப்பதுதான். இதன் விளைவாக என்ன நேரிடும். என்பது வேறு விஷயம். இப்போது யாரும் எதுவும் சொல்லமுடியாது. தற்போது மத்திய கமிட்டி தேர்தல் தோல்வி பற்றிய ஆய்வை ஆரம்பித்து விட்டது. இதன் முடிவு என்னவாகிறது என்று நாம் பாக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்