முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு பாதுகாப்பு செலவு ரூ.11 கோடி

புதன்கிழமை, 25 மே 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,மே.- 25 - சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதி அஜ்மல் கசாப்பு சிறையில் இருந்து தப்பியோடிவிடாமலும் அவனை யாரும் கொன்றுவிடாமல் பாதுகாத்ததற்கும் ரூ. 11 கோடி செலவாகியுள்ளது. அதை தர வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசை இந்திய-திபெத் எல்லைப்போலீஸ் இயக்குனரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி 10 தீவிரவாதிகள் தாக்கினர். இதில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவன் தற்போது மும்பையில் பாதுகாப்பு அதிகம் உள்ள ஆர்தூர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் தப்பியோடி விடாமலும் அவனை யாராவது கொன்றுவிடாமலும் இருக்க இந்திய-திபெத் எல்லை போலீசார் பாதுகாத்து வந்தனர். கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி முதல் 2010-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி முடிய கசாப்புக்கு பாதுகாப்பு செலவு ரூ. 10 கோடியே 87 லட்சம் ஆகிவிட்டது என்றும் இதை மகாராஷ்டிரா அரசு ஏற்றுக்கொண்டு கொடுக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்திய-திபெத் எல்லை போலீஸ் இயக்குனர் ஜெனரல் ஆர்.கே.பாட்டியா கேட்டுக்கொண்டுள்ளார். இதை மகாராஷ்டிரா மாநில உள்துறை முதன்மை செயலாளர் மேதா காட்கில் தெரிவித்துள்ளார். இந்த கட்டண ரசீதை பார்த்து நாங்கள் அதிர்ந்துபோனோம் என்றும் காட்கில் கூறினார். மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியது மகாராஷ்டிரா மாநில பிரச்சினை மட்டுமல்ல. தேசிய பிரச்சினையாகும் என்று கூறி நாங்கள் பதில் கடிதத்தை தயாரித்துக்கொண்டியிருக்கிறோம் என்றும் காட்கில் மேலும் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்